தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Mansoor Ali Khan: Judge Instructs Mansoor Ali Khan To 'Think About The Consequences'

Mansoor Ali khan: 'பின் விளைவை யோசிச்சு கருத்து சொல்லுங்க' மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுறுத்தல்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 19, 2024 03:25 PM IST

நிதி நெருக்கடியில் இருப்பதால் ரூ.1 லட்சம் அபராத தொகையை செலுத்த மன்சூர் அலிகான் 10 நாள் அவகாசம் கோரினார்.

நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)
நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதி நெருக்கடியில் இருப்பதால் ரூ.1 லட்சம் அபராத தொகையை செலுத்த மன்சூர் அலிகான் 10 நாள் அவகாசம் கோரினார். இதையடுத்து மன்சூர் அலிகான் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. மேலும் ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும் முன் அது ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து செயல் பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக லியோ படத்தில் திரிஷாவுடன் அப்படியான காட்சிகள் ஏதும் இடம் பெறுமா? என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படியான காட்சிகள் ஏதும் அமையவில்லை.” என்று மன்சூர் அலிகான் பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் பேச்சிற்கு திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரத்தில் தலையிட்டு, நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டது.

அதன்படி, பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மன்சூர் மன்னிப்புக்கேட்ட நிலையில், அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. இதனிடையே மன்சூர் இந்த விவகாரத்தில் தன் பெயரை த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது த்ரிஷா தரப்பில் இருந்து மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்யமுடியாது என்றும் தன்னைப்பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மன்சூர் அலிகான் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரினார் என்றும் இதுவே தன்னுடைய் எதிர்கருத்து என்று வாதிடப்பட்டது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும் என்றும் தான் வீடியோ ஆதாரத்தை காண்பிக்க தயாராக இருப்பதாகவும் பேசினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மன்சூர் பொதுவெளியில் சர்ச்சைக்கருத்துக்களை பேசியதற்காகவே மூவரும் எக்ஸ் தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர். அதை அவதூறாக கருத முடியாது.

மேலும் பேசிய நீதிபதி, பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது, அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு.

தொடர்ந்து பேசிய அவர், உரிமையியல் சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையிலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

ஆகையால், மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறேன். இந்த அபாராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.