Tamil News  /  Entertainment  /  Mansoor Ali Khan Gives 4 Hour Time For Actors Association

Mansoor VS Trisha: கோவணத்தை உருவிடுவேன்.. 4 மணி நேரம் தான் டைம்- நடிகர் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த மன்சூர்

Aarthi V HT Tamil
Nov 21, 2023 10:31 AM IST

நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகர் சங்கத்திற்கு மன்சூர் அலிகான் பதில் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக விளக்கம் கொடுக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து மன்சூர் அலிகான் பேசினார். அப்போது நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகர் சங்கத்திற்கு மன்சூர் அலி பதில் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அவர் கூறுகையில், “ நான் பேசியதை தவறாக கட் செய்து போட்டு இருக்கிறார்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என நல்லவிதமாக தான் நான் பேசினேன். நடிகர் சங்கம் இப்போது மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. 

இது போன்று ஒரு வீடியோ வந்து இருக்கிறது என என்னை கேள்வி கேட்கலாம். ஆனால் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. போன் செய்யவில்லை, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கணும்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தால் நீதிபதி பார்த்தவுடன் தண்டை கொடுப்பாரா? அதே போல் தான் ஒரு சங்கம் நடத்துபவர்கள் இப்படி செய்யலாமா? 4 மணி நேரம் நடிகர் சங்கத்திற்கு டைம் தருகிறேன்.

அனைவரும் முன்பும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொன்னார்கள். நான் மன்னிப்பு கேட்கும் ஜாதியா. நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலாய தவறு செய்துவிட்டது.

வேண்டாம் அமைதியாக இருக்கிறேன். எரிமலையாக மாறினால் துண்டு காணும் துணிய காணும் கோமணம் உருவி அனுப்பிடுவேன்.

சங்கத்தில் இப்படி வந்தால் என்ன இவர் இப்படி செய்து இருக்கிறார் என கேட்க வேண்டும் அல்லவா.. நானும் சொல்லி இருப்பேன். த்ரிஷாவை நான் பாராட்டி தான் பேசுனேன். அவர் தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் ரேப் சீன் என்றால் என்ன? உண்மையாக ரேப் செய்வதா? கொலை செய்யும் சீன் என்ன உண்மையாக கொலை செய்வதா?

த்ரிஷா கூட போட்டோ போட்டு எழுதும் போதும் ஏன் போட்டோ கொஞ்சம் நல்லா போட்டு இருக்க கூடாதா? சில போட்டோவில் நல்ல இருக்கேன். ஆங்கிலம் வரை சென்றுவிட்டது. அந்த விஷயத்தில் எனக்கு சந்தோஷம் தான். மக்களுக்கு என்னப்பற்றி தெரியும். தமிழ்நாடே என் பின்னால் உள்ளது. நடிகர் சங்கம் 4 மணி நேரத்தில் கொடுத்த அறிக்கையை வாபஸ் வாங்க வேண்டும். மக்களுக்கு என்ன பற்றி தெரியும். தமிழ்நாடே என் பின்னால் உள்ளது. நான் என்ன அனாதை பிணமாக தெரிகிறேனா “ என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.