ரொம்ப அழுகாத தைரியமா இரு.. கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து போலீசாரின் வாகனத்தில் அமர்ந்திருந்த தனது மகனை சந்தித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது இணையத்தில் வைரல்.

ரொம்ப அழுகாத தைரியமா இரு.. கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். சமீப காலமாக இவர் காமெடி கலந்த வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். மன்சூர் அலிகானின் மகனான அலிகான் துக்ளக்கை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் போதை பொருள் பயன்படுத்தியதாக சென்னை திருமங்கலம் போலீசார் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். அவர்களிடம் ஓபியம், கஞ்சா, போதை மாத்திரைகள் உள்பட பல்வேறு போதை பொருள்கள் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாணவர்களிடம் நடத்திய விசாரணை
இதைத்தொடர்ந்து போலீசார் கைதான மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் , போதை பொருள் முழுவதையும் ரெட்டிட் என்ற செயலி மூலமாக வாங்கியதாகவும், பிறருக்கும் சப்ளை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.