தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilayaraja Vs Manjummel Boys: நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. மஞ்சும்மல் பாய்ஸ் குழு கொடுத்த செம பதிலடி!

Ilayaraja Vs Manjummel boys: நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. மஞ்சும்மல் பாய்ஸ் குழு கொடுத்த செம பதிலடி!

Aarthi Balaji HT Tamil
May 25, 2024 08:59 AM IST

Ilayaraja Vs Manjummel boys: மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தின் கிளைமாக்ஸில் வரும் கம்மணி பாடல் உரிமையை வாங்கிய பிறகுதான் படத்தில் பயன்படுத்தப்பட்டதாக இளையராஜாவின் நோட்டீஸ்களுக்கு தயாரிப்பாளர் பதில் அளித்தார்.

நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. மஞ்சும்மல் பாய்ஸ் குழு கொடுத்த செம பதிலடி
நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. மஞ்சும்மல் பாய்ஸ் குழு கொடுத்த செம பதிலடி

ட்ரெண்டிங் செய்திகள்

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்கள், அங்கிருக்கும் குணா குகையில் தவறி விழும் தனது நண்பனை எப்படி மீட்டார்கள் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.

படத்தின் க்ளைமாக்ஸில் குணா படத்தில் வரும், கண்மணி அன்போடு என்ற பாடல் இடம் பெற்று இருந்தது. இது தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முன்னணி நடிகர்கள் யாரும் இல்லாமல் புதுமுக நடிகர்கர்கள் நடித்திருந்த இந்த படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் படத்தை வெகுவாக கொண்டாடினார்கள். கோலிவுட் பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டினார்கள்.

இளையராஜா நோட்டீஸ்

இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு புது சிக்கல் எழுந்து இருக்கிறது. இந்த பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ், படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்

இது தொடர்பான நோட்சில், “ பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.

பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கு படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் பதிலளித்து உள்ளனர். இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி பதிலளித்துள்ளார். அந்தந்த இசை நிறுவனங்களின் அனுமதியுடன் இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது என்றார்.

பாடலின் உரிமையைப் பெற்றுள்ளது

"ஒரு நிறுவனம் தெலுங்கில் பாடலின் உரிமையைப் பெற்றுள்ளது. மற்ற மொழிகளில் மற்றொரு நிறுவனம் உள்ளது. பாடலின் உரிமையாளர்களான பிரமிட் மற்றும் ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகியோரிடமிருந்து நாங்கள் உரிமையைப் பெற்றுள்ளோம்" என்று அந்தோணி விளக்கினார். 

தமிழ் பாடல் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் இந்த பாடலின் உரிமையை மஞ்சும்மாள் பாய்ஸ் வெளியிட்டுள்ளார். சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் சௌபின் ஷாகிர் மற்றும் அவரது தந்தை பாபு ஷாஹிர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்