தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Manjummel Boy Movie Box Office Collection In Tamil Nadu

Manjummel Boys Box Office: அட கோலிவுட்டில் மட்டும் மஞ்சும்மல் பாய்ஸின் வசூல் இவ்வளவா? - முழு விபரம் இங்கே!

Aarthi Balaji HT Tamil
Mar 12, 2024 11:06 AM IST

Manjummel Boys Box Office: ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த மஞ்சும்மல் பாய்ஸ், சில தினங்களுக்கு முன் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ்!
மஞ்சும்மல் பாய்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. இந்தப்படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் இடம் பெற்று இருந்தது தமிழ் ரசிகர்களிடம் பயங்கரமாக கனெக்ட் ஆகி விட்டது. இதனால் இப்போதும் தமிழில் மஞ்சும்மல் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப்படத்தின் தற்போதைய வசூல் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தப்படம் வெளியான அன்றைய தினம் 3.3 கோடி ரூபாய் வசூல் செய்தது. முதல் நாள் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி பாசிட்டிவாக கருத்துக்களை பகிர, அதனைதொடர்ந்து படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குள் வர ஆரம்பித்தனர்.

இதனால் முதல் வார இறுதியில் இந்த திரைப்படம் 28. 35 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது வார முடிவில் 37.15 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 17 நாட்கள் கழிந்த நிலையில், இந்தப்படம் தற்போது இந்தியாவில் மட்டும் 77.40 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப்படம் உலக அளவில் இந்தப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் மலையாள சினிமாவுக்கான வருடம் என்று சொல்லலாம். காரணம், இந்த வருடத்தில் வெளியான டொவினோ தாமஸின் அன்வேஷிப்பின் கண்டதும், மம்முட்டியின் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கின்றன.

குறிப்பாக, மஞ்சும்மல் பாய்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தை சிறப்பு செய்யும் வண்ணம், அந்தப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடலை, படத்தின் முக்கியமான இடமொன்றில் புகுத்தி இருந்தார்கள். அது மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கமல்ஹாசனும் படக்குழுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தப்படத்தை பார்த்து கமல்ஹாசன் அழுது விட்டதாக குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ சிலர் குணா படத்தில் இடம் பெற்ற சில விஷயங்கள் இந்தப்படத்தில் இருப்பதாக சொன்னார்கள். அதனைதொடர்ந்துதான் நான் இந்தப்படத்தை பார்த்தேன். எனக்கு திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது.

கிளைமாக்ஸில் குணா படத்தில் இடம் பெற்ற பாடல் வந்த போது மொத்த திரையரங்கமே ஆர்ப்பரித்து கைத்தட்டியது. மிகவும் நெகிழ்ச்சிகரமான அந்த மொமண்டில் நான் அழுது விட்டேன்.

கிட்டதட்ட 33 வருடங்களுக்கு பிறகு குணா படத்திற்கான மரியாதை கிடைத்தது போல உணர்ந்தேன். படத்தை பார்த்த கமல்ஹாசனும் அழுது விட்டார். நாங்கள் அதனை படமாக்கும் போது, இந்தளவு ரிஸ்க் இருக்குமா? என்பதை நாங்கள் உணரவில்லை. ஆனால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்க்கும் போது, நாங்கள் உண்மையில் இவ்வளவு பெரிய ரிஸ்கை எடுத்து இருக்கிறோமா என்று தோன்றியது.” என்று பேசினார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படம், சில தினங்களுக்கு முன் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இதுவரை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்