Bigg Boss Manjari: ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகிட்டு என்ன பத்தி பேசுறதா? கடுப்பான மஞ்சரி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Manjari: ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகிட்டு என்ன பத்தி பேசுறதா? கடுப்பான மஞ்சரி

Bigg Boss Manjari: ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகிட்டு என்ன பத்தி பேசுறதா? கடுப்பான மஞ்சரி

Malavica Natarajan HT Tamil
Jan 15, 2025 01:30 PM IST

Bigg Boss Manjari: பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் எலிமினேட் ஆனது பற்றி மற்றவர்கள் கூறும் கருத்துகளை ஏற்க மாட்டேன் என மஞ்சரி கூறியுள்ளார்.

Bigg Boss Manjari: ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகிட்டு என்ன பத்தி பேசுறதா? கடுப்பான மஞ்சரி
Bigg Boss Manjari: ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகிட்டு என்ன பத்தி பேசுறதா? கடுப்பான மஞ்சரி

குறிவைக்கப்பட்ட மஞ்சரி

தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் தன் கருத்துகளை ஆணித்தரமாக வைத்த விதம், போட்டியில் ஜெயிக்க தன் முழு பலத்தையும் உபயோகப்படுத்திய விதம், முகத்திற்கு நேராக தன் கருத்துகளை வெளிப்படுத்தும் தைரியம் என பல காரணங்களுக்காக இவரை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதே காரணங்களுக்காக அவர் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களால் வெறுத்து ஒதுக்கவும் பட்டார். இதனால், அவர் பிக்பாஸ் வீட்டில் தனித்து விடப்பட்டதாகவும் நினைத்தார்.

ஆதரவாக நின்ற முத்து

பலரும் இவரது கேரக்டரை பற்றி பேசிய சமயத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த ஒரே நபர் முத்து மட்டும் தான். மேலும் ஃபிரிஸ் ரவுண்டில் கூட அவரது வீட்டில் இருந்து வந்தவர்கள் எப்படி ஒருவரின் முகத்தை பார்த்தால் அவர் உண்மை சொல்கிறாரா பொய் சொல்கிறாரா என்பது தெரியும் என சௌந்தர்யா உள்ளிட்ட பலரையும் கேள்வி எழுப்பினர்.

பிஆர் டமால் எலிமினேஷன்

இந்த டாஸ்க் முடிந்த சில நாட்களிலேயே மஞ்சரி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது எலிமினேஷன் குறித்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள் பேசியுள்ளனர்,

இந்நிலையில், லிட்டில் டாக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள மஞ்சரி, தன் எலிமினேஷன் குறித்தும் பிஆர் டீம் குறித்தும் பேசியுள்ளார்.

அதெல்லாம் இல்லை

அந்தப் பேட்டியில், இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டு போனவர்கள் எல்லாம் என் எலிமினேஷன் பற்றி பேசுகின்றனர். அவர்கள் சொல்வதை எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பிக்பாஸ் வீட்டில் நாம் பார்ப்பது அனைத்தும் உண்மையில்லை. அங்கு பலரும் நான் நெகட்டிவ் பிஆரால் தான் வெளியேற்றப்பட்டேன் எனப் பேசி வருகின்றனர். அதையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

நிச்சயம் பலன்

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரது வாய்ப்பும் பிஆர் டிமால் தான் பறிபோனதாக அங்கு பேசுகின்றனர். அது உண்மையில்லை. அவர்கள் அங்கு கொடுத்த உழைப்புக்கான பலன் நிச்சயம் இருக்கும் என்றார்.

இவர் இப்படி சொன்னதற்கு காரணம், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் பலரும் சௌந்தர்யாவை குறிவைத்து அவர் பிஆர் டீம் வைத்திருக்கிறார். அவருக்கு கேமரா முன்னால் என்ன செய்ய வேண்டும் என நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த வீட்டில் எதுவுமே செய்யாமல் இந்த வீட்டில் அவர் நிலைத்து நிற்க அது தான் காரணம் எனக் கூறி வந்தனர்.

இதனால் மனமுடைந்த சௌந்தர்யாவை பிக்பாஸ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் சமாதானப்படுத்தினர். மேலும், மஞ்சரியின் விளையாட்டு திறமைகளையும் பாராட்டியவர்கள் இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்க.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.