புற்றுநோய் படுத்திய பாடு.. ஒரு பக்கம் நில நடுக்கம்... இன்னொரு பக்கம் வொர்க் அவுட்! ' - மாஸ் காட்டிய மனிஷா!
நேபாளத்தில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தனது சொந்த ஊரான காத்மாண்டுவில் தங்கியுள்ள மனிஷா கொய்ராலா!
54 வயதான மனிஷா கொய்ராலா தனது உடற்பயிற்சியை எந்தளவு முக்கியம் என்று நினைக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நேபாளத்தின் காத்மாண்டுவில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் மனிஷா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய சென்று இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை மனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா
2012 ஆம் ஆண்டில் மனிஷாவுக்கு கருப்பை புற்றுநோய் (கடைசி கட்டம்) இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து பேசிய அவர், ' எனக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, எல்லோரையும் போலவே நானும் மிகவும் பயந்தேன். நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம். மருத்துவர்கள் வந்த போது நான் செத்து விட போகிறேன் என்று எண்ணினேன். இதுதான் என் முடிவு என்று உணர்ந்தேன்.' என்றார்.
மேலும் பேசிய அவர், 'நான் உடைந்து போன பல நேரங்கள் இருந்தன, அந்த சமயத்தில் இருள், நம்பிக்கையின்மை, வலி மற்றும் பயத்தை மட்டுமே பார்த்தேன். எனக்கு ஒரு விஷயம் தெரியும், வாழ்க்கையில் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால்,
நான் சென்று எனக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால் வாழ்க்கை எனக்கு நிறைய கொடுத்தது.
கெடுத்துவிட்டேன்
நான்தான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன் என்று உணர்ந்தேன். எனவே அந்த தவறை சரி செய்ய விரும்பினேன். என் வேலையில் நான் பொறுப்பை உணர்ந்தேன்... நிறைய ரசிகர்கள் இருந்ததால் மோசமான படங்களில் நடித்து ஏமாற்றமடைந்தேன். எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால், எனது ரசிகர்களை ஏமாற்றாமல் என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன்" என்று பேசினார்.
திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றான இமயமலையின் வடக்கு அடிவாரத்தில் இன்று 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9.05 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு காத்மாண்டு அருகே ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தனர்.
டாபிக்ஸ்