‘எனக்கு பிடிச்ச வேலைய என் வாயாலயே வேணாம்னு சொல்ல வச்சிட்டாங்க.. கெளசிக் மாதிரி பல பேர்’ - மணிமேகலை பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘எனக்கு பிடிச்ச வேலைய என் வாயாலயே வேணாம்னு சொல்ல வச்சிட்டாங்க.. கெளசிக் மாதிரி பல பேர்’ - மணிமேகலை பேச்சு

‘எனக்கு பிடிச்ச வேலைய என் வாயாலயே வேணாம்னு சொல்ல வச்சிட்டாங்க.. கெளசிக் மாதிரி பல பேர்’ - மணிமேகலை பேச்சு

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 28, 2025 09:25 AM IST

எனக்கு ஆங்கரிங் தொழில் எவ்வளவு பிடிக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தொழிலை நானே என் வாயால் வேண்டாம் என்று சொல்லும் சூழ்நிலை வந்தது. - மணிமேகலை பேட்டி!

‘எனக்கு பிடிச்ச வேலைய என் வாயாலயே வேணாம்னு சொல்ல வச்சிட்டாங்க.. கெளசிக் மாதிரி பல பேர்’ - மணிமேகலை பேச்சு
‘எனக்கு பிடிச்ச வேலைய என் வாயாலயே வேணாம்னு சொல்ல வச்சிட்டாங்க.. கெளசிக் மாதிரி பல பேர்’ - மணிமேகலை பேச்சு

இது குறித்து அவர் பேசும் போது, ‘நான் இந்த சின்ன திரைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டன. சின்னத்திரையில் ஒரு வாய்ப்பை எப்படியாவது அடித்துப் பிடித்து வந்துவிடலாம். ஆனால், சின்னத்திரைக்குள் வந்த பிறகு அதனை நீண்ட நாட்களுக்கு கைகொண்டு செல்லும் போது நாம் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

குறுக்கே இந்த கௌஷிக் வந்தால் என்ன செய்வாய் என்பது போல பலர் உங்களுக்கு முட்டுக்கட்டைப்போடுவார்கள். நாம் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் முடிவு எடுக்க வில்லை. ஆனால், நடக்கும் சம்பவங்கள் அதுவாக ஒரு இடத்தை நோக்கி நம்மை தள்ளுகிறது. என்னுடைய கல்யாண வாழ்க்கையும் அப்படித்தான். கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருக்கும் போதுதான் நாங்கள் இருவரும் கல்யாணம் செய்தோம்.

அதன் பிறகு எங்களுக்கு தேவையானவற்றை வாங்கினோம். அந்த சமயத்தில் நான் எடுத்த அந்த முடிவு மிக மிக முக்கியமான முடிவு என்று நினைக்கிறேன். எனக்கு ஆங்கரிங் தொழில் எவ்வளவு பிடிக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தொழிலை நானே என் வாயால் வேண்டாம் என்று சொல்லும் சூழ்நிலை வந்தது.

உண்மையில் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலை எனக்கு வரும் என்று நான் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை. நான் அந்த சேனலில் இருந்து விலகிய பின், ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்தேன். அங்கு எல்லோரும் நீங்கள் அடுத்ததாக எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

நான் சம்பந்தப்பட்ட சேனலில் இருந்து விலகிப்போன போது கூட நான் அப்படி வருத்தப்படவில்லை. ஆனால் அந்த நிகழ்விற்கு பின்னர் வீட்டுக்கு வந்து பயங்கரமாக அழுதேன். அடுத்த நாளே நான் இப்போது வேலை பார்க்கும் சேனலில் வேலைக்கு சென்று விட்டேன்.

உண்மையில் பிரச்சினை நடந்து நான் சேனலை விட்டு வெளியேறிய அடுத்த நாளே எனக்கு அழைப்பு வந்து. நான்தான் மூன்று மாதங்கள் நேரம் எடுத்துக் கொண்டேன். அது எனக்கு ஒரு விஷயத்தை உணர்த்தியது. நாம் உண்மையாக ஒரு வேலையை செய்யும் பொழுது, அந்த உண்மை நம்மை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.