தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்

Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்

Kalyani Pandiyan S HT Tamil
May 20, 2024 06:00 AM IST

Manickam Narayanan:ஆகையால், ஒரு குடும்பத்தில் இரண்டு பேருமே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஆனால் பெண்கள் கொஞ்சம் கூடுதலாக விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். இறைவன் இயல்பிலேயே பெண்களுக்கு விட்டுக்கொடுக்கும் குணத்தை அதிகமாக கொடுத்து இருக்கிறான்.- மாணிக்கம்

Manickam Narayanan:  ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்
Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்கள் அனுசரித்து செல்ல வேண்டும்:

 

இது குறித்து அவர் பேசும் போது, “இன்று எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்களுக்கு பணம் வந்தவுடன் தலைகால் புரியாமல் சென்று விடுகிறது. என்னுடைய கருத்து என்னவென்றால், பெண்கள் தங்களுடைய சொந்தக்காலில் நிற்பதுதான் இங்கு நிறைய விவாகரத்துக்கள் நடப்பதற்கு காரணம் ஆகின்றன. 

பெண்கள் இது தொடர்பாக என்னை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அண்மையில், ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி விவாகரத்து செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சபலம் என்பது இல்லாமல் எந்த ஒரு ஆணும், பெண்ணும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆண் தவறாக செல்லும் பட்சத்தில், சிலர் பெண்கள் அதற்கு ஒத்து சென்று, சமாளித்து வாழ்கிறார்கள்.

கேள்வி கேட்கிறார்கள்:

 

சில பெண்கள் கேள்வி கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை பெண்கள் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது என்று நினைக்கிறேன். காரணம் என்னவென்றால் 60, 70 வயதிற்கு மேலே உங்களுக்கு துணை என்று ஒருவர் கண்டிப்பாக வேண்டும். எல்லோரும் இங்கு சிவகுமார் போல திடகாத்திரமாக வாழ்ந்து விட முடியாது. ஆகையால் தங்களது தவறை இருவரும் உணர்ந்து விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்று நான் நினைக்கிறேன்.

ஆகையால், ஒரு குடும்பத்தில் இரண்டு பேருமே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஆனால் பெண்கள் கொஞ்சம் கூடுதலாக விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். இறைவன் இயல்பிலேயே பெண்களுக்கு விட்டுக்கொடுக்கும் குணத்தை அதிகமாக கொடுத்து இருக்கிறான். ஆகையால் பெண்கள் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இது தவறாக கூட இருக்கலாம். 

பிரச்சினைகள் இருக்காது:

 

ஆனால் அப்படி செய்தால், முக்கால்வாசி பிரச்சினைகள் சரியாகி விடும் என்று நான் நினைக்கிறேன். தனுஷ் ஐஸ்வர்யாவை பொறுத்த வரை, தனுஷ் மீது தான் மகன்களுக்கு பாசம் அதிகம் என்று நான் மீடியா செய்திகள் வழியாக கேள்விப்படுகிறேன். அதே நேரம் அம்மா ஐஸ்வர்யா மீது மகன்களுக்கு பெரிதாக பாசம் இல்லை என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். இவை சிறுவயதில் நீங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமைகிறது.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்