Mani Ratnam:மணிரத்னம் பாரதிராஜா திடீர் சந்திப்பு..காரணம் என்ன தெரியுமா மக்களே?
இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரும் சந்தித்து இருக்கிறார்கள்
பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த காரணத்தால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பானது மக்களிடம் அதிகளவு மேலோங்கி காணப்படுகிறது.
அண்மையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான பிரோமோஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு படம் தொடர்பான ப்ரோமோக்களை வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘அகநக’ பாடலானது வருகிற மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குநர் மணிரத்னம் இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
காரணம் என்ன என்று விசாரித்தால் படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்தது. பொன்னியின் செல்வன் பாகம் 1 -ன் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
அந்த நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்; அந்த நிகழ்வு தொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவையும் வருகிற மார்ச் 29 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று மணிரத்னம் இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சென்று அழைத்திருக்கிறார். இருதுருவங்கள் இணைந்தது!