Mani Ratnam: உச்ச நட்சத்திரங்களுடன் ஈகோவா?.. கமலுடன் இத்தனை வருடங்கள் இணையாதது ஏன்? - மணிரத்னம் பதில்!
முன்பு அவருடன் இணைந்து பணியாற்றிய காரணத்திற்காக மட்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியமில்லை.நாங்கள் தற்போது இணைந்திருக்கும் படத்தில் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்
1987ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘நாயகன்’. இன்றும் கல்ட் கிளாசிக்காக பார்க்கப்படும் இந்தப்படத்திற்கு பின்னர் இயக்குநர் மணிரத்னம் - கமல் கூட்டணி இணையவே இல்லை.
இந்த நிலையில் அதற்கான காரணம் குறித்து சிஎன்என் நியூஸ் -18 இந்தியன் ஆஃப் தி இயர் நிகழ்வில் பங்கேற்ற மணி ரத்னம் பேசினார். அவர் பேசும் போது “ அவருக்கு பொருந்த கூடிய கதை என்னிடம் இல்லாமல் இருந்தது. சினிமாவில் பல்வேறு விஷயங்களை செய்து முடித்திருக்கும் ஒரு கலைஞனுக்கு கதை தயார் செய்வது என்பது உண்மையில் கடினமானது.
முன்பு அவருடன் இணைந்து பணியாற்றிய காரணத்திற்காக மட்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தற்போது இணைந்திருக்கும் படத்தில் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை கொடுக்க முடியும் என்று நம்புகிறோம்
எனக்கு நான் பணியாற்றிய எந்த உச்ச நட்சத்திரத்தின் உடனும் முரண்பாடு வந்தது கிடையாது. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், அவர்கள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். நானும் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று பணியாற்றுவது இல்லை. கதை அவர்களை கேட்டது பணியாற்றினேன்” என்றார்.
மணிரத்னம் - கமல் கூட்டணி தற்போது தக் லைஃப் படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது!
டாபிக்ஸ்