Mammootty: மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு.. பரவிய வதந்தி! உண்மை விஷயத்தை பகிர்ந்த நடிகரின் குழுவினர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mammootty: மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு.. பரவிய வதந்தி! உண்மை விஷயத்தை பகிர்ந்த நடிகரின் குழுவினர்

Mammootty: மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு.. பரவிய வதந்தி! உண்மை விஷயத்தை பகிர்ந்த நடிகரின் குழுவினர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Mar 16, 2025 11:15 PM IST

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அது வெறும் வதந்தியே என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் தற்போது விடுமுறையில் இருப்பதாகவும், ரம்ஜான் நோன்பு கடைப்படித்து வருவதாகவும் மம்முட்டி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மம்முட்டிக்கு புற்று நோய் பாதிப்பு.. பரவிய வதந்தி! உண்மை விஷயத்தை பகிர்ந்த நடிகரின் குழுவினர்
மம்முட்டிக்கு புற்று நோய் பாதிப்பு.. பரவிய வதந்தி! உண்மை விஷயத்தை பகிர்ந்த நடிகரின் குழுவினர்

இதையடுத்து இந்த தகவல்களுக்கு மம்முட்டி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இது வெறும் வதந்தி எனவும், நடிகர் பூரண நலமுடன் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்

மம்முட்டி குறித்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானது. அவர் தற்போது விடுமுறையில் இருக்கிறார். ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். இதன் காரணமாகவே அவர் ஷுட்டிங் செல்லாமல் பிரேக் எடுத்துள்ளார். பிரேக் முடிவுக்கு பிறகு மகேஷ் நாரயணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என மம்முட்டி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மம்முட்டி புதிய படம்

மலையாள திரையுலகமே எதிர்பார்க்கும் படமாக மகேஷ் நாரயணன் நடிப்பில் மம்முட்டி - மோகன்லால் இணைந்து நடிக்க இருக்கும் புதிய படம் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள திரையுலகின் டாப் ஸ்டார்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் தற்போது MMM (மம்முட்டி, மோகன்லால், மகேஷ் நாரயணன்) என அழைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2023இல் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய மம்முட்டி சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இந்த படத்துக்கு பின்னர் இதே ஆண்டில் ஜோதிகாவுடன் இணைந்து மம்முட்டி நடித்த காதல் - தி கோர் என்ற படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர், கடந்த ஆண்டில் மம்முட்டி நடிப்பில் வெளியான ஆப்ரஹாம் ஓஸ்லர், பிரம்மயுகம், டர்போ என மூன்று படங்களும் ஹிட்டாகின. அத்துடன் ஐீ5 ஓடிடி தளத்தில் வெளியான மனோரதங்கள் என்ற ஆந்தாலஜி சீரிஸிலும் நடித்திருந்தார். 

இந்த ஆண்டில் மம்முட்டி நடிப்பில் வெளியாகியிருக்கும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது தவிர பசூக்கா என்ற படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. காலம் காவல் என்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.

மம்முட்டி தமிழ் படங்கள்

1990இல் வெளியான மெளனம் சம்மதம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் மம்முட்டி. இதன் பின்னர் அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, மக்கள் ஆட்சி, புதையல், அரசியல், மறுமலர்ச்சி உள்பட தமிழில் மட்டும் 15க்கு மேற்பட்ட படங்கலில் நடித்துள்ளார். கடைசியாக மம்முட்டி நடிப்பில் வெளியான நேரடி தமிழ் படமாக 2019இல் வெளியான பேரன்பு படம் இருந்து வருகிறது.