Mamitha Baiju: வில்லுப்பாட்டில் வில்லங்கம்; முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கை; பாலா மமிதாவை அடித்ததற்கான காரணம் என்ன?
பாலா சார்.. படப்பிடிப்பில் அதனை செய்தவர்களை பார்த்து கற்றுக்கொள் என்றார். கொஞ்ச நேரத்தில் டேக் போகலாம் என்றார். நான் திணறிவிட்டேன்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வணங்கான்’. முன்னதாக நடிகர் சூர்யா இந்தப்படத்தில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கமிட் ஆகி இருந்தார்.
ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அந்தப்படத்தில் இருந்து அவர் விலகினார். அந்தப்படத்தில் சூர்யாவுடன் நடிக்க கமிட் ஆனவர்தான் நடிகை மமிதா பைஜூ. அவர் அதில் வில்லுப்பாட்டு பாடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது படப்பிடிப்பில் பாலா தன்னை அடித்ததாக பேட்டிகொடுத்திருக்கிறார்.
இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் அவர் பேசும் போது, “ அவர்கள் பாடுவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த கதாபாத்திரம் நீண்ட நாட்களாக வில்லுப்பாட்டு பாடும் கதாபாத்திரம். அதனால் அந்த கதாபாத்திரம் தான் பயன்படுத்தும் கருவியை வேகமாக நகர்த்து. நான் அதை கற்றுக்கொள்வதற்கு நேரம் பிடிக்கும்.
பாலா சார்.. படப்பிடிப்பில் அதனை செய்தவர்களை பார்த்து கற்றுக்கொள் என்றார். கொஞ்ச நேரத்தில் டேக் போகலாம் என்றார். நான் திணறிவிட்டேன்.
மூன்று டேக்குகள் எடுத்தன. இதைப்பார்த்த பாலா சத்தம் போட ஆரம்பித்து விட்டார். விளையாட்டாக அடிக்கவும் செய்தார். சூர்யா சாருக்கு பாலா சாரின் அணுகுமுறை தெரியும். ஆனால் எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் முன்னமே ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். அதனால் நான் மனதளவில் அதற்கு தயாராக இருந்தேன்.” என்று பேசினார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்