Fahadh Faasil: ’மாமன்னன்’ படப்புகழ் ஃபஹத் ஃபாசிலுக்கு ADHD குறைபாடு - அது எத்தகைய நோய்.. நிபுணர்கள் சொல்வது என்ன?!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fahadh Faasil: ’மாமன்னன்’ படப்புகழ் ஃபஹத் ஃபாசிலுக்கு Adhd குறைபாடு - அது எத்தகைய நோய்.. நிபுணர்கள் சொல்வது என்ன?!

Fahadh Faasil: ’மாமன்னன்’ படப்புகழ் ஃபஹத் ஃபாசிலுக்கு ADHD குறைபாடு - அது எத்தகைய நோய்.. நிபுணர்கள் சொல்வது என்ன?!

Marimuthu M HT Tamil
Updated May 28, 2024 05:00 PM IST

Fahadh Faasil: ’மாமன்னன்’ படப்புகழ் நடிகர் ஃபஹத் ஃபாசில் தனது 41 வயதில் ADHD குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அந்த நோய் பற்றியும் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்வோம்.

Fahadh Faasil: மாமன்னன் படப்புகழ் ஃபகத் ஃபாசிலுக்கு ADHD குறைபாடு - அது எத்தகைய நோய்.. நிபுணர்கள் கருத்து!
Fahadh Faasil: மாமன்னன் படப்புகழ் ஃபகத் ஃபாசிலுக்கு ADHD குறைபாடு - அது எத்தகைய நோய்.. நிபுணர்கள் கருத்து! (Instagram, Unsplash)

அண்மையில் மலையாளத்தில் ’’ஆவேஷம்’’ படத்தில் நடித்து இருந்த ஃபஹத் ஃபாசில், சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் PEACE VALLEY பள்ளியை கேரளாவில் தொடங்கி வைத்தார்.

அப்போது நடிகர் ஃபஹத், தனக்கு ADHD பாதிப்பு இருப்பதை ஒப்புக்கொண்டார்.

ஃபஹத் ஃபாசிலுக்கு  வந்த உடல்நலக்குறைபாடு:

அப்போது பேசிய நடிகர் ஃபஹத் ஃபாசில், தனக்கு Attention Deficit Hyperactivity Disorder எனும் நரம்பியல் குறைபாடு உறுதியாகியுள்ளதாக கூறினார். குழந்தைகளிடையே அதிகம் ஏற்படும் இந்த குறைபாட்டை, சிறுவயதிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்றும், தனக்கு 41 வயதில் இது கண்டறியப்பட்டதால் இதனை குணப்படுத்த வாய்ப்புள்ளதா என மருத்துவர்களிடம் கேட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதுதான் இணையத்தின் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

 ஏனெனில், ஃபஹத் ஃபாசில் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கிய ’மாமன்னன்’ படத்தில் ’ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலம் ஆனார். முன்னதாக அவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகியப் படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஃபஹத், மலையாளத்தில் எண்ணற்ற சினிமாவில் நடித்துள்ளார். 

Attention Deficit Hyperactivity Disorder என்றால் என்ன?

ADHD, கவனக்குறைவு மற்றும் அடிக்கடி கிளர்ந்தெழுதல் கோளாறு என்று பொதுவாக சொல்லப்படுகிறது. மேலும், இது ஒரு நபர் கவனம் செலுத்துதல், அதிவேகத் தன்மை மற்றும் மனக்கிளர்ச்சி ஆகியவற்றில் சிரமத்தை எதிர்கொள்ளும் ஒரு நிலை ஆகும். 

ADHD பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்குகிறது. ஒரு நபர் வயது வந்தவராக மாறும்போது தெரிகிறது. இந்த அறிகுறிகள் உற்பத்தித்திறனைக் குறைக்கும். மேலும் அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும். 

இதுதொடர்பாக Attention Deficit Hyperactivity Disorder சிகிச்சையாளர் மெரிடித் கார்டர் கூறியதாவது, ‘ நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் உள்ளன. அதைப்பொறுத்து நாம் செயல்பட வேண்டியது தான்’ என்றார். மேலும் ஏடிஎச்டியை எப்படி கையாளவேண்டும் எனவும் விளக்கியுள்ளார். 

ஏ.டி.எச்.டி.யில் பின்பற்ற வேண்டிய உதவிக்குறிப்புகள்:

உணர்ச்சி கட்டுப்பாடு:

பெரும்பாலும் நம்முடைய கோபத்தை, துன்பத்தை ஷேர் செய்ய ஒரு நம்பிக்கையான நபரைப் பிடித்து, உங்களது பிரச்னையை மனம்விட்டு பேசுங்கள். பாரம் குறையும். அதிக உணர்வுபூர்வமாக இருக்கும்போது தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். தியானம் மற்றும் யோகா போன்ற நுட்பங்களைப் பயிற்சி செய்வது நரம்பு மண்டலத்தை நிதானமாக உணர வைக்கும்.

பெரிய ஆற்றல் ஏற்ற இறக்கங்கள்:

ADHDயில், ஒரு நபர் பெரிய ஆற்றல் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்வது இயற்கையானது. இதனால் அடிக்கடி இவர்கள் கோபப்படுவது இயல்பு. உயிரியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், ஊட்டச்சத்து தின்பண்டங்களை மென்று சாப்பிடுவதும் அதை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த வழியாகும். இன்றைய நாளை முடிக்கும் போது அடுத்த நாளைப் பற்றி சில விஷயங்களைத் தீர்மானிக்கும் நடைமுறைகளையும் நாம் உருவாக்க வேண்டும். இது நம் மனது அமைதியாக இருக்க உதவுகிறது. 

கச்சிதமான மனப்பான்மை மற்றும் அதீத ஈடுபாடு:

ADHD பிரச்னை கொண்டவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, தங்களுடைய குறைகளை தாங்களே புரிந்துகொண்டு, தோல்வியை ஏற்றுக்கொள்வது. இதனால், நாம் மிகக் கச்சிதமாக இருக்கவேண்டும், சரியானவராக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் நம்மை ஆட்கொள்ளும். எனவே, நாம் நமது அடையாளத்தினை சமநிலையில் வைக்க முயற்சிக்கவேண்டும். 

அதிகப்படியான தூண்டுதல்:

இந்த ADHD பிரச்னை கொண்டவர்கள் அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல் கொண்டிருந்தால், அதனை திசை திருப்ப ஒருநாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுடன் இருக்கும் சூழலை உருவாக்கி முடிக்கவேண்டும். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.