மூன்று முறை கத்தியால் தாக்கிய தயாரிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..சட்டப்போரட்டதுக்கு கிடைத்த வெற்றி - நடிகை மால்வி
கடந்த 2020ஆம் ஆண்டில், மும்பையில் தயாரிப்பாளர் யோகேஷ் சிங்கால், நடிகை மால்வி மல்ஹோத்ராவை மூன்று முறை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு, 4 வருட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, நீதி கிடைத்திருப்பதாக மால்வி மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

இந்தியில் வெளியான ஹோட்டல் மிலன் என்ற படத்தில் நடித்தவர் நடிகை மால்வி மல்ஹோத்ரா. மேலும் ஓடிடியில் நேரடியாக வெளியான இந்தி படம், மலையாள படம் ஒன்றிலும் நடித்திருக்கும் இவர் தெலுங்கில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் வெளியான திராகபத்ரா சாமி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஏராளமான பஞ்சாபி மியூசிக் விடியோக்களிலும் தோன்றியிருக்கும் இவரை, பிரபல தயாரிப்பாளர் யோகேஷ் சிங் பின்தொடர்ந்து கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 2020இல் மும்பையில் வைத்து நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வழக்கில் தாக்குதலில் ஈடுபட்ட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. இதையடுத்து தனது 4 ஆண்டு கால சட்ட போராட்டத்துக்கு நீதி கிடைத்திருப்பதாக நடிகை மால்வி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.,
மால்வி மல்ஹோத்ரா இன்ஸ்டா பதிவு
கடந்த வாரம் நடிகை மால்வி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவில், "ஒன்பது இரவுகள் நீதி மற்றும் உண்மையின் வெற்றியைக் குறிக்கிறது. எப்போதும் சரியான பாதையில் சென்று வாழ்வில் நேர்மறையாக இருப்பவர்களுக்கு நீதி சேவை செய்கிறது...எனக்கு நீதி வழங்கி, என் பொறுமைக்கு உரிய பலனை அளித்து, என் வழக்கில் வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி மாதாஜி" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
மால்வி மல்ஹோத்ரா தாக்குதல் வழக்கு
யோகேஷ் உடனானதொழில்முறை சந்திப்பு நடந்தபோது, அவர் மால்வியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முன்மொழிந்தாராம். அத்தோடு விட்டுவிடாமல் தொடர்ந்து மெசேஜ் அனுப்புவது, நடிகையை பின்னாள் தொடர்வது எனவும் இருந்ததுள்ளார்.
இதில் மால்வியை காயப்படுத்த நினைத்த தயாரிப்பாள் யோகேஷ், கத்தியால் மூன்று முறை வரை தாக்கியதாக நடிகை தரப்பில் குற்றாச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சட்டப்போராட்டத்தில் நடிகை மால்வி ஈடுபட்டார்.
இதில், கடந்த வாரம் மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் யோகேஷ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு குறித்து நடிகை மால்வி, “இறுதியாக நிம்மதி கிடைத்திருக்கிறது. நான் கடந்த நான்கு வருடங்களாக போராடி வருகிறேன். ஏராளமான அழுத்தங்iகள் மற்றும் தொந்தரவுகள் இருந்தன. ஆனால் கடைசியில் உண்மை வெளிவந்தது. நான் கடந்து வந்த மன அதிர்ச்சி அதிகமாகவே இருந்தது. உடல் தழும்புகளை விட, மன வேதனைதான் என்னை பாதித்தது. என்றார்.
தொடர்ந்து, "நான் ஆன்மிகத்தில் மிகவும் நாட்டமுள்ளவன். அதுதான் எனக்கு உதவிய மற்றும் ஊக்கமளித்த சிகிச்சையாக இருந்தது. அதுவும் என்னுடைய வலுவான மன உறுதியும் தான் என்னை இந்த சூழ்நிலையில் இருந்து வெளியேற்றியது.
கூடுதலாக, என் அப்பா எனக்கு நிறைய ஆலோசனை கூறினார். அவர் எனது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவினார்" என்று கூறினார்.
மால்வி தாக்குதல் சம்பவம்
மும்பை வெர்ஸோவா பகுதியில் ஒரு காஃபி ஷாப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மால்வியை தனது ஆடம்பரக் காரில் வந்த யோகேஷ் சிங் வழிமறித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி நேரிலும் வற்புறுத்த, மால்வி மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட யோகேஷ் சிங் கத்தியால் மால்வியை மூன்று முறை பலமாகக் குத்திவிட்டு தன் காரில் தப்பித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வெர்ஸோவா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் யோகேஷ் சிங் நண்பரானதாகவும், 2020 ஜனவரி மாதம் அவரைச் சந்தித்ததாகவும், ஒரு பாடல் விடியோ ஆல்பத்துக்காக தன்னை நடிக்கக் கேட்டதாகவும் மால்வி காவல்துறையிடம் புகாரில் தெரிவித்திருந்தார்.
மால்வி மல்ஹோத்ரா பயணம்
மால்வி 2018இல் ஹோட்டல் மிலன் மூலம் திரையில் அறிமுகமாகும் முன், 2017இல் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான உடானில் நடித்தார். ஓடிடி திரைப்படமான ஜோராவர் டி ஜாக்குலின் மற்றும் மலையாளத்தில் அபியுஹம் ஆகிய படங்களில் நடித்த பிறகு, இந்த ஆண்டு தெலுங்கில் ராஜ் தருண் நடித்த திரகபதர சாமி மூலம் அறிமுகமானார்.
சர்ச்சையில் சிக்கிய மால்வி
கடந்த ஜூலை மாதம் நடிகர் ராஜ், நடிகை மால்வியுடன் இணைந்து தன்னை ஏமாற்றியதாக அவரது முன்னாள் மனைவி லாவண்யா தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதில் நடிகையும், அவரது சகோதரரும் தன்னை அச்சுறுத்தியதாக லாவண்யா தரப்பில் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் லாவண்யா மீது புகார் அளித்த நடிகை மால்வி, "அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு ஆர்வம் இல்லை; என்னை விட்டு விடுங்கள். நான் என்னுடைய முதல் தெலுங்குப் படத்தை இப்போதுதான் நடித்து முடித்தேன். என் நற்பெயரை கெடுக்கிறார்கள்" என்றார்

டாபிக்ஸ்