Bigg Boss Tamil 7: பிரதீப் எவிக்ஷன்.. ‘கமலுக்கு அவ்வளவு ஈகோ;16 வயசுக்கு உம்மா கொடுத்தவரு’ - கிழித்த மாலினி யுகேந்திரன்!
கமல் பிக்பாஸை விட்டு வெளியேற வேண்டும் யுகேந்திரன் மனைவி பேசி இருக்கிறார்.
(1 / 6)
இது குறித்து இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “நேற்று நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தேன். அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாக அமைந்திருந்தது. குறிப்பாக பிரதீப் வெளியேற்றப்பட்டதற்காக கமல்ஹாசன் கூறிய காரணமானது ஏற்புடையதாகவே இல்லை. எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் கூட, அது எப்படிப்பட்ட கட்டமாக இருந்தாலும் கூட, அவர் தரப்பை சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் அந்த வாய்ப்பானது பிரதீப்பிற்கு கொடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க கமல்ஹாசன் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
(2 / 6)
ஜனநாயக முறைப்படி பிரதீப்பை வெளியேற்றுவதற்கு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக கமல்ஹாசன் குறிப்பிட்டு சொல்லி இருந்தார். ஆனால் உண்மையில் போட்டியாளர்களிடம் அவர் பேசும் பொழுது, பிரதீப் இவ்வாறு செய்திருக்கிறார், பிரதீப் இப்படியான ஒரு முறையில் இருந்திருக்கிறார் என்று சொல்லி எடுத்துக் கொடுத்து பேசினார். சிறுநீர் கழிக்கும் போது கதவை மூடாமல் இருந்ததும், அவ்வப்போது தவறான கமெண்டுகளை விட்டதும், நிச்சயமாக தவறுதான். ஆனால் அதற்காக அவர் மீது இப்படியான ஒரு அழுத்தமான பழிச்சொல்லை போட்டு வெளியே அனுப்பியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
(3 / 6)
கமல் பெண் பாதுகாப்பு பற்றி பேசி பிரதீப்பை வெளியேற்றினார். கமல்ஹாசன் புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில், 16 வயது இருந்த ரேகாவை அவரது அனுமதி இல்லாமல் முத்தமிட்டார். இவர் பெண் பாதுகாப்பை பற்றி பேசுகிறார்உண்மையில் இந்த விஷயத்தில் கமலின் ஈகோ தான் ஜெயித்திருக்கிறது.
(4 / 6)
பிரதீப் அடிக்கடி கமல் சாரே வந்து சொன்னால் கூட நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த ஈகோதான், கமல் இப்படியான ஒரு முடிவை எடுத்ததற்கு காரணமாகும். கமலுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு பெரிய மரியாதை இருக்கிறது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவது தான் சரியாக இருக்கும். பிரதீப் பேச ஆரம்பிக்கும் பொழுது, கமல் உட்காருங்கள் என்று அதிகார தோரணையில் பேசினார்.
(5 / 6)
அவர் உண்மையில் மாயா குழுவிற்குதான் சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் தேவையில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பார்க்கிறார்கள். கமல்ஹாசனுக்கு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தேவை. மாயாவை தவிர வேறு யாருக்காவது அவர் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தாரா?. நானெல்லாம் உள்ளே இருந்திருந்தால் கமல்ஹாசனை கிழித்து விட்டிருப்பேன். கமல்ஹாசன் பெண்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அவருடைய எல்லா திரைப்படங்களிலும் லிப் லாக் சீன் இருந்திருக்கிறது.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்