Movie Shoot: 700 கோடி ரூபாய் நஷ்டம்! படப்பிடிப்பு, திரையிடல் நிறுத்தப் போவதாக அச்சுறுத்தும் மல்லுவுட்..
Movie Shoot: 2024 ஆம் ஆண்டில், பல படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற போதிலும், மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நிதி இழப்பை சந்தித்ததாகக் கூறி படப்பிடிப்பை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Movie Shoot: 2024 ஆம் ஆண்டு மலையாள சினிமாத்துறைக்கு நல்ல நல்ல படங்கள் வெளியானதால், அவை வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை தந்ததாக ரசிகர்களுக்கு தோன்றியது.
இழப்பை சந்தித்த மலையாள சினிமா
ஆனால், கடந்த ஆண்டு மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆவேஷம், தி கோட் லைஃப் மற்றும் மார்க்கோ போன்ற சில வெற்றிப் படங்கள் வெளியாகின. இருப்பினும், பல்வேறு காரணங்களால் சினிமாத்துறை பெரும் நிதி இழப்பை சந்தித்ததாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் இந்த பிரச்சினைகள் தீர்க்கப் படாவிட்டால், ஜூன் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் திரையிடலை நிறுத்து உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், மல்லுவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.
தயாரிப்பாளர்கள் தொழில் நிறுத்த எச்சரிக்கை
நியூஸ் மினிட் செய்தியில் பேசிய, தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார், "தயாரிப்பாளர் சங்கங்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FEFKA) ஆகியோருடன் இணைந்து கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பிறகு படப்பிடிப்பு மற்றும் திரையிடல் நிறுத்த முடிவை வியாழக்கிழமை அறிவித்ததாக"க் கூறினார்.
24 படம் மட்டும் தான் வெற்றி
மேலும், “கடந்த ஆண்டு வெளியான 200 படங்களில் வெறும் 24 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மீதமுள்ள படங்களின் தயாரிப்பாளர்கள் 600 முதல் 700 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்தனர்.” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டங்களின் போது நடிகர்கள் ஒப்பந்தத்தில் சம்மதித்தாலும், நிலைமை மாறவில்லை என்றும் அவர் கூறினார். திரையரங்குகளில் நல்ல வசூல் ஈட்டும் படங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி, அதற்கேற்ப விலையை நிர்ணயிப்பதாக OTT தளங்களை அவர் விமர்சித்தார்.
தாறு மாறாக உயர்ந்த தயாரிப்பு செலவு
கூட்டத்தில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஊதியம், அரசு விதிக்கும் பொழுதுபோக்கு வரி ஆகியவை அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாக சங்கங்கள் விவாதித்தன. சங்க பிரதிநிதிகள், “கடந்த சில ஆண்டுகளில் தயாரிப்பு செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
மலையாள சினிமாவால் இதைத் தாங்க முடியாது. கலைஞர்களின் ஊதியம் மிகப்பெரிய பிரச்சினையாகும், மேலும் அவர்களுக்கு இந்தத் தொழிலில் எந்த அர்ப்பணிப்பும் இல்லை. அரசாங்கமும் எந்த உதவியும் செய்யவில்லை. ஒரே தேசம், ஒரே வரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பொழுதுபோக்கு வரி, ஜிஎஸ்டியுடன் சேர்ந்து, மொத்தத்தில் 30% ஆக உள்ளது,” என்று கூறினர்.
அடையாள வேலை நிறுத்தம்
ஜூன் 1-ம் தேதி தொழில் நிறுத்தத்திற்கு முன்னதாக, திருவனந்தபுரத்தில் சட்டமன்ற கட்டிடத்திற்கு முன்னால் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 இல் மலையாள சினிமாவின் இழப்புகள்
இந்தியன் எக்ஸ்பிரஸின் கடந்த ஆண்டு அறிக்கையில், கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மலையாள சினிமா சந்தித்த இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டது. 2025 ஆம் ஆண்டில் மக்களை திரையரங்குகளுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டிய அவசியத்தை அது வலியுறுத்தியது.
வசூலைக் குவித்த படங்கள்
மஞ்சுமெல் பாய்ஸ், த கோட் லைஃப், ஆவேஷம், பிரேமலு மற்றும் ARM போன்ற படங்கள் நல்ல வசூல் செய்து, இந்த ஆண்டு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, தொழிலின் அதிக வசூல் ஈட்டிய படங்களாக மாறின. கிஷ்கிந்தா காண்டம், குருவாயூர் அம்பலனடயில் மற்றும் வர்ஷாங்கல்கு செஷம் போன்ற படங்கள் 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்