Biju Menon:'நடிப்பு போர் என்றால் முகத்துக்கு நேராக சொல்வார்’ - மனைவி பற்றி தேசிய விருது வென்ற நடிகர் பிஜூ மேனன்
தனது நடிப்பு போர் என்றால் தன் மனைவி முகத்துக்கு நேராக சொல்வார் என்று மனைவி குறித்து தேசிய விருது வென்ற நடிகர் பிஜூ மேனன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்குப் பின், நடந்த வாழ்வியல் மாற்றங்களில் நம் மக்கள் நிறையபேர் மலையாளப் படங்களையும் பார்க்கத் தொடங்கினர்.
நடிகர் பிஜூ மேனன் மலையாளத்தில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர். தமிழில் விஜயகாந்துடன் இணைந்து அரசாங்கம் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தாலும், தம்பி படத்தில் சங்கரபாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், 2020ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படத்தில், அய்யப்பன் நாயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களையும் மிரளச் செய்தார். அதில் அய்யப்பனும் கோஷியின் ரீச்சுக்கு தமிழ் ரசிகர்களும் காரணமாய் இருந்தனர் என்பது முக்கியமானது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார், பிஜூ மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தகைய பிஜூ மேனனின் மனைவி சம்யுக்தா வர்மா. அவரும் தொழில்ரீதியாக ஒரு நடிகை. பிஜூ மேனனின் நடிப்புக்கு, அவரது வளர்ச்சிக்கு அவரது மனைவியும் முக்கிய காரணமாக இருக்கிறார். இந்நிலையில் தனது நடிப்பிற்கு உதவிய தனது மனைவி பற்றி, ‘’பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட்’’ யூட்யூப் சேனலுக்கு, சுமார் ஒரு ஆண்டுகளுக்கு முன் அவர் அளித்த பேட்டியின் தொகுப்பு கீழே பகிரப்படுகிறது. இது தொழில் ரீதியாக ஒத்த துறையில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொண்டால் கிடைக்கும் நற்பலன்களை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது.
‘’நாங்கள் ஒரு சராசரியான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். நானும் திருச்சூர். என் மனைவி சம்யுக்தா வர்மாவும் திருச்சூர் தான். இரண்டு பேரும் மிடில் கிளாஸ் ஃபேமிலி. எங்களுக்கு ஃபேமிலியில் இருக்கும் சிக்கல்கள் பற்றி நன்கு தெரியும். சினிமாவில் இருக்கும் பிரச்னைகள் பற்றி சம்யுக்தாவுக்கு நன்கு வெளிப்படையாகவே தெரியும். நான் எப்போதும் அவருடன் கம்ஃபோர்ட் ஸோனில் தான் பயணிப்பேன். என் சினிமாவைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்றால் நன்றாகவுள்ளது என்றும், போராக இருக்கிறது என்றால் போராக இருக்கிறது என்றும் என் மனைவி சொல்வார். அப்படி பரஸ்பரம் பேசிக்கொள்ளும் சாதாரண குடும்பம் எங்களுடையது.
சம்யுக்தா மீண்டும் நடிப்பது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். திருமணத்திற்குப் பின் நடிக்கக்கூடாது என்பது அவர் எடுத்த முடிவு தான். சம்யுக்தா வர்மாவுக்கு மீண்டும் நடிக்க ஆர்வமில்லை. ஏனெனில், எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரை நல்லமுறையில் வளர்த்து எடுக்கவேண்டியதுதான் பெற்றோராகிய எங்களின் முதல் முக்கியத்துவம். அதற்கு யாராவது பணம் சம்பாதித்தால் போதும். அதனால் பிஜூ மேனனாகிய நான் சம்பாதிக்கிறேன். அதுவும் அவருக்கு நடிக்க விருப்பம் இல்லாததின்காரணமாகத் தான்.
என் பக்கம் இருந்து அவள் நடிக்கக்கூடாது என நான் தடுக்கவில்லை. அது எங்களுடைய பரஸ்பரமுடிவுதான். மனைவியோடு சண்டைபோட்டால் அதிகபட்சம் ஒரு இரவு மாத்திரமே பேசாமல் இருப்பேன். என்னுடைய கோபம் எல்லாம் தற்காலிகமானது தான். அவருக்கும் அப்படி தான்.
நான் சுரேஷ் கோபிக்கு ஆதரவு கொடுப்பது என்பது அவரது கட்சி சார்ந்து அல்ல(தற்போது பாஜகவில் சுரேஷ் கோபி உள்ளார்). திருச்சூரை சேர்ந்த ஒருத்தருக்கு இன்னொரு திருச்சூர்காரனின் ஆதரவு தான். அதனால் சிலர் என்னை விமர்சிக்கும்போது மனதளவில் கஷ்டப்படுப்படுகிறேன். இருப்பினும், அவர்கள் என்னைப் பற்றி புரிந்துகொள்வார்கள் என்பதை நான் அறிவேன். பார்க்கலாம்.
பிஜூ மேனனுடைய படங்கள் எல்லாம் மினிமம் நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்கள் எனச் சொல்வதற்குக் காரணம், நான் ஒரு நல்ல சினிமா ரசிகன். அவ்வளவுதான். அப்படி ஒரு நிலைப்பாட்டில் தான், நான் கதை கேட்கிறேன். ரசிகர்களுக்கு எது பிடிக்கும்; எது பிடிக்காது என சிந்தனை செய்துதான் படத்தில் நடிக்கணும். அதேபோல், அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் உரிய மதிப்பினை நாம் திருப்பித் தரவேண்டும். அப்படி தான், நான் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன்’’ என்றார்.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9