Malaikottai Vaaliban box office day 1: மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Mohanlal: மலையாளத்தில் மோகன்லால், சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பேரடி மற்றும் டேனிஷ் சேட் ஆகியோரும் நடித்துள்ளனர்.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி நடிகர் மோகன்லாலின் நடிப்பில் வெளியான மலைக்கோட்டை வாலிபன், 2023 குடியரசு தினத்திற்கு முன்னதாக வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. Sacnilk.com இன் அறிக்கையின்படி, படத்தின் முதல் நாள் ஒரு நல்ல நாளாக இருந்தது. இது இந்தியாவில் ரூ.5.5 கோடி நிகர வருவாய் ஈட்டியதாக தகவல் தெரிவிக்கிறது.
மலைக்கோட்டை வாலிபன் படத்தை வியாழக்கிழமை 51.23 சதவீத ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசித்தனர். காலை காட்சிகளில் 59.81 சதவீதமும், பிற்பகல் காட்சிகளுக்கு 37.09 சதவீதமும், மாலை காட்சிகளுக்கு 48.62 சதவீதமும், இரவு காட்சிகளுக்கு 59.41 சதவீதமும் பார்வையாளர்கள் இருந்தனர். மலைக்கோட்டை வாலிபன் கொச்சியில் அதிகபட்சமாக 67.5 சதவீதத பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது.
மலைக்கோட்டை வாலிபன் பற்றி
மலையாளத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு மாற்று உலகில் அமைக்கப்பட்ட கதை, மலைக்கோட்டை வாலிபன் என்ற மறுக்கமுடியாத போர்வீரரைப் பின்தொடர்கிறது, அவரது பயணம் நேரம் மற்றும் எல்லைகளைக் கடந்து, அவரது பாதையில் உள்ள ஒவ்வொரு எதிரியையும் சவால் செய்கிறார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கப்பட்டினம் ரங்கராணியாக சோனாலி குல்கர்னி, அய்யனாராக ஹரீஷ் பேரடி, சமதங்கனாக டேனிஷ் சேட் ஆகியோர் நடித்துள்ளனர்.
மலைக்கோட்டை வாலிபன் திரைப்பட விமர்சனம்
இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் விமர்சனத்தின் ஒரு பகுதி, “சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த படத்தின் முதுகெலும்பாக இருப்பது மோகன்லால். இந்த பாத்திரத்தை அவர் ஏற்றுக்கொள்வது அவரது மகுடத்தில் மற்றொரு வைரம். சிறந்த நடிப்பை அவர் வழங்கியுள்ளார். மீண்டும் அவர் எவ்வளவு திறமையானவர் மற்றும் அர்ப்பணிப்புள்ளவர் என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அபாரமாக நடித்து வரும் இவரை பாராட்டியே ஆக வேண்டும். மோகன்லால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும், ஆனால் இது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்பாராததை எதிர்பாருங்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.