Malaikottai Vaaliban: நாளை ரிலீஸாகும் மலைக்கோட்டை வாலிபன் - மலையாள சினிமாவுடைய வெற்றிமாறனின் அடுத்த அடி!
மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படம் குறித்துப் பேசியுள்ளார்.
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள புதிய மலையாளப் படமான மலைக்கோட்டை வாலிபன் ஜனவரி 25-ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார்.
பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஒரு பீரியட் டிராமா ஆகும். இது மறக்கமுடியாத சினிமா சவாரி என்று தயாரிப்பாளர்கள் கூறினர்.
‘’மலைக்கோட்டை வாலிபன்'' படத்தில் மோகன்லால், சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பேரடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சேட் மற்றும் மணிகண்டன் ஆச்சாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பி.எஸ்.ரஃபீக்குடன் இணைந்து திரைக்கதை எழுதிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இப்படத்தை இயக்கியுள்ளார். இது தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
மலைக்கோட்டை வாலிபன் கதைக்களம்:
மலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லால் ஒரு மந்திரவாதியாக நடிப்பதாகத் தெரிகிறது. IMDb-ன் கருத்துப்படி, இந்தப் படம் "அடுத்த தலைமுறைகளுக்கு வழி வகுக்கும் ஒரு புகழ்பெற்ற மனிதரின் வாழ்க்கையை" சொல்கிறது.
இதுகுறித்து இந்து இணையதளத்தில் பேசிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூறியதாவது, 'இது ஒரு “உலகளாவிய கதை”. நாங்கள் ஒரு கதையைச் சொல்கிறோம். நான் மிகவும் இந்திய நிலப்பரப்பையும் அந்த பின்னணியில் வேரூன்றிய கதாபாத்திரங்களையும் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் ஜப்பானிய நாட்டுப்புற கலாசாரம், ஜப்பானின் சாமுராய் கலாசாரம், பல கலாசாரத்திலிருந்து நான் உலகெங்கிலும் இருந்து சில கூறுகளை எடுத்துள்ளேன்’’ என்றார்.
ட்ரெய்லரில் நாம் உணர்ந்தது?
‘மலைக்கோட்டை வாலிபன்’ டிரெய்லர், பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் ஒரு உலகத்தின் காட்சியைக் காட்டுகிறது.
இந்த உடை இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களைப் போலவே இருக்கிறது. ஆனால் இது குறித்து எந்த உத்தரவாதமும் இல்லை.
இரண்டு வீரர்களுக்கிடையேயான சண்டையின் காட்சி உள்ளது. விதிகளுக்கு எதிராக செல்ல முயற்சிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறது. தோற்றவர் மற்றும் வென்றவர் ஆகிய இருவருமே கட்டளையிடும் மனிதனால் சுடப்படுவதால் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிகாரமும் குரூரமும் தெளிவாகத் தெரிகிறது. சூழ்நிலை பதற்றமாக இருக்கும்போது, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதுபோல், மோகன்லால் வருகிறார்.
அட்வான்ஸ் புக்கிங்
ஃபோரம் கேரளத்தின் எக்ஸ் பக்கத்தில், ஜனவரி 24ஆம் தேதி நிலவரப்படி, ரூ .2.65 கோடி மதிப்புள்ள முன்பதிவு ’மலைக்கோட்டை வாலிபன்’ படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,635 காட்சிகளுக்கான 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன.
நடிகரான டேனிஷ் சேட்:
மலையாளத்தில் ஆர்.ஜே.வாக இருந்த டேனிஷ் சைட்டிஸ் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். டிரெய்லரில் அவர் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் தாடியுடன் கூட காட்டப்படுகிறார்.
வாழ்த்திய யோகி பாபு:
இந்நிலையில் நாளை மலைக்கோட்டை வாலிபன் ரிலீஸாகவுள்ள நிலையில் அப்படத்தை வாழ்த்தி நடிகர் யோகி பாபு பதிவுசெய்துள்ளார். அதில், ‘வாழ்த்துகள் மோகன் லால் சார். நல்ல திரைப்படத்தை கொடுத்திருக்கும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்கு வாழ்த்துகள். மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9