'நானும் தனிப்பட்ட மனுஷி தான்.. நடந்ததுல இருந்து பாடம் கத்துக்கணும்'.. அனுபவ பாடம் சொன்ன மலைக்கா அரோரா
மலைக்கா அரோரா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர். பாலிவுட்டில் பெயர் சொல்லும் நடிகர்களில் ஒருவராக உள்ள இவர் 50 வயதைக் கடந்த நடிகை மலைக்கா அரோராவுடன் 6 வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்த நிலையில், அதனை சில நாட்களுக்கு முன் அர்ஜூன் கபூர் உறுதி செய்தார்.
மௌனத்தை கலைத்த மலைக்கா
ஆனால், இந்த காதல் முறிவு குறித்து மலைக்கா அரோரா பொதுவெளியில் எந்த கருத்தும் தெரிவிக்காமலே இருந்தார். இது பலரையும் சந்தேகமாக்கிய நிலையில், தற்போது முதல் முறையாக மலைக்கா அரோரா, அர்ஜூன் கபூருடனான தன் காதல் முறிவு குறித்து பேசியுள்ளார்.
ஆங்கில் நாளிழலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூர் 'நான் சிங்கிளாக இருக்கிறேன்' பொதுவெளியில் சொல்லியதுடன் இது என் தனியுரிமை எனவும் கூறியுள்ளார்.