Mahizh thirumani: த்ரிஷாவை காதலித்த பிரகாஷ்.. விடாமுயற்சி விட்டு வைத்த மிச்சம்.. எங்கே போனார் ? - மகிழ் திருமேனி பேட்டி!
Mahizh thirumani: விடாமுயற்சி திரைப்படத்தில் நாங்கள் சொல்ல வந்த மையக்கருத்து ஒரு பெண், திருமண பந்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டால், அவள் தாராளமாக செல்லலாம். அதனை ஒரு ஆணாக மதிக்க வேண்டும் - மகிழ் திருமேனி!

Mahizh thirumani: விடாமுயற்சி திரைப்படத்தில் கயல் (த்ரிஷா) பிரகாஷ் என்பவரை காதலிப்பதாகவும், அதன் காரணமாக அவர் அர்ஜூனை (அஜித்) பிரிய முடிவெடுத்து விட்டதாகவும் காண்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால், படத்தில் கடைசி வரை யார் அந்த பிரகாஷ் என்று சொல்லப்பட்டு இருக்காது. அது ஏன் என்பதற்கான காரணம் குறித்து மகிழ்திருமேனி சினி உலகம் யூடியூப் சேனலுக்க்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் விளக்கி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் கொடூரமாக காட்டப்பட்ட இரண்டு வில்லன்களுக்கு இடையிலான உறவை அந்தப்படத்தின் இயக்குநர் கௌதம் சார் பெரிதாக வரையறுக்கவில்லை; ஆனால், படத்தின் ரிலீசுக்கு பிறகு அது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது. ஆனால், கௌதம் சார் அதை ஓப்பன் எண்ட்டாக இருக்கட்டும் என்று கூறிதான் வைத்தார்.
ஆணாக மதிக்க வேண்டும்.
விடாமுயற்சி திரைப்படத்தில் நாங்கள் சொல்ல வந்த மையக்கருத்து என்னவென்றால், ஒரு பெண் திருமண பந்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டால், அவள் தாராளமாக செல்லலாம். அதனை ஒரு ஆண் மதிக்க வேண்டும்.
ஒரு பெண் அந்த திருமண பந்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள என்ன விதமான காரணத்தை வைத்திருந்தாலும், அதை நாம் மரியாதையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். விடாமுயற்சி படத்தின் இறுதியில், அஜித் சார் திரிஷாவை பார்த்து ஐ லவ் யூ என்று சொல்வார்.
அதன் பின்னணியில், ஒரு பெண்ணுக்கு ஒரு பந்தத்திலிருந்து விலகிச் செல்வதற்கான முழு உரிமை உண்டு. அது என்ன காரணமாக இருந்தாலும் சரி.. எப்படி ஒரு ஆணுக்கு திருமண பந்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு உரிமை இருக்கிறதோ, அதேபோல பெண்ணுக்கும் உண்டு. இந்த முடிவை நான் மதிக்கிறேன் என்ற வசனம் ஒலிக்கும்.
மிக முக்கிய கருத்து.
இது குறித்து நாங்கள் நிறைய விவாதம் செய்தோம். இந்தக்கருத்து படத்தில் தானாக மக்களிடையே சென்று சேருஎன்று நாங்கள் நினைத்தோம். த்ரிஷாவிற்கு ஐ லவ் யூ என்ற ஒரு டயலாக்கை மட்டும் நாங்கள் வைத்தோம். த்ரிஷா கேரக்டரை பொறுத்தவரை, அதுவே அனைத்தையும் கடத்தி விடும் என்று நினைத்தோம். அதுதான் இந்தப்படத்தில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய கருத்து.
ஒருவேளை அந்த பெண்ணுக்கு உண்மையாகவே இன்னொருவர் உடன் தொடர்பு இருக்குமானால், அதை ஒரு ஆண் மகனாக மதிக்க வேண்டும். அதற்கான எல்லா காரணங்களும், நியாங்களும் படத்தில் அந்தப்பெண்ணுக்கு இருந்தது.
ஒரு ஆண் திருமணத்தை மீறிய உறவை வைத்துக் கொள்ளும் பொழுது, அதற்கான நியாயங்களையும் காரணங்களையும் நாம் தேடுகிறோம். அது பெண்ணுக்கும் பொருந்தும் தானே. அப்படி இருக்கும் பொழுது, படத்தில் பிரகாஷ் என்ற கேரக்டரை ஏன் காட்ட வேண்டும். இந்தக்கதை அர்ஜூன் மற்றும் கயலுக்குமானது. இது பிரகாஷ் பற்றிய கதை கிடையாது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்