Singappenne Serial Today: வீட்டை விட்டு கிளம்பிய மகேஷ்.. பரிதவிக்கும் குடும்பம்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
Singappenne Serial Today: தாய் திட்டியதால் வீட்டை விட்டு மகேஷ் கிளம்புகிறார். இதனால் அவரது குடும்பம் பரிதவிக்கிறது. சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய எபிசோட் குறித்துப் பார்க்கலாம்.

Singappenne Serial Today: சன் டிவியில் இரவு 9 மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் தொடர், சிங்கப்பெண்ணே.
இன்றைய எபிசோட்:
இன்றைய சிங்கப்பெண்ணே எபிசோடில், மகேஷ், ஆனந்தியைப் பெண் பார்க்க அவரது விடுதி வார்டனை அழைத்துக்கொண்டு ஆனந்தியின் கிராமத்துக்குச் சென்ற விவகாரம், மகேஷின் அப்பா, அம்மாவுக்கு தெரியவருகிறது.
அப்போது மகேஷின் அம்மா கண்டிக்கிறார், அப்போது பேசும் மகேஷின் அம்மா, ‘’ நான் புரிஞ்சு வைச்சிக்கிட்டதை விடவா, அவள் உன்னை புரிஞ்சு வைச்சு இருக்கப்போறாள். ஆனந்தியை உனக்கு கல்யாணம் பண்ணித் தர்றேன்னு சொல்லிட்டாள் அவள் நல்லவள் ஆகிடுவாளா.. உன்கிட்ட இருக்கிற பணத்துக்காக நல்லவளாக இருக்கிறவ அவ.. நாளைக்கே பணத்தை தூக்கிப்போட்டு என் பிள்ளை வாழ்க்கையில் குறுக்க வராதேன்னு சொன்னாள் உன்னை அவள் திரும்பிகூட பார்க்கமாட்டாள். அவ உனக்கு அம்மாவாடா..’’ என சரமாரியாக கேட்கிறார், மகேஷின் தாய்.
அதற்குப் பதில் சொல்லும் மகேஷ், ‘பணத்தையும் சமூகத்தையும் பெரிசா நினைக்கிறது அவங்க இல்லை. நீங்க தான்’ என கடுப்பாகிறான். உடனே மகேஷின் தந்தை போதும் என மகேஷ் மற்றும் அவரது தாய் பார்வதியை எச்சரிக்கிறார்.
மகேஷை வார்த்தையால் சுட்ட அவரது தாய் பார்வதி:
அதைத்தொடர்ந்து பேசும் மகேஷின் தாய் பார்வதி, ‘அவள் அவ்வளவு நல்லவள் என்றால் அவளது வீட்டிலேயே சென்று பிள்ளையாக இருந்துக்கோ.. என் வீட்டில் இனி ஒரு நிமிஷம் நிற்காதே’ என சொல்கிறார்.
உடனே, மகேஷின் தந்தை அவரது மனைவி பார்வதியைக் கையைத் தூக்கி அடிக்க வருகிறார்.
உடனே கண்கலங்கும் பார்வதி, ‘ ஏங்க நிறுத்திட்டீங்க. அடிங்க. இவனுக்கு அவ தான் அம்மான்னா, இவன் அங்கேயே போகட்டும். என்னை வெறுத்து இவன் இங்கே இருக்க தேவையில்லை. இவன் யார்கூட நிம்மதியாக சந்தோஷமாக இருப்பானோ, அங்கேயே போகட்டும்’’ எனச் சொல்லி கண்ணீர் வடிக்கிறாள்.
உடனே பேசும் மகேஷின் தந்தை, ‘ இந்த வார்த்தைக்கு நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ பார்வதி. மகேஷ் நீ உள்ளே போ. உங்கள் அம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு’ என்கிறார். உடனே மகேஷ் கண்கலங்குகிறான்.
மேலும் படிக்க: சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷுக்கு சப்போர்ட் செய்யும் வார்டன்
மேலும் படிக்க: சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷின் காதலால் பரிதவிக்கும் ஆனந்தி
அம்மாவுக்கு பிடிச்சவங்களாகத் தான் நான் இருக்கணும்: மகேஷ்
அப்போது பேசும் மகேஷ், ‘ இல்லை டாடு. மாம் ரொம்பத்தெளிவாக இருக்காங்க. அவங்களைப் பொறுத்தவரை, அவங்களுக்குப் பிடிச்சவங்களாகத் தான் நான் இருக்கணும். எனக்கு யாரையும் பிடிக்கக் கூடாது. எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கவும் கூடாது. ஆனந்தியைப் பிடிக்கும் என்றால் அவளை தொந்தரவு செய்வாங்க. வார்டனை பிடிக்கும் என்றால் என்னை வீட்டை விட்டு போகச் சொல்வாங்க. நான் போறேன்’ என கோபித்துக்கொண்டு கிளம்புகிறார், மகேஷ்.
மேலும் படிக்க: சிங்கப்பெண்ணே சீரியலில் கத்தி முனையில் கடத்தப்பட்ட ஆனந்தி
முந்தைய எபிசோட் சொல்வது என்ன?:
ஒரு கார்மெண்ட்ஸை நடத்தும் வசதி படைத்த முதலாளியின் மகன் மகேஷ். அங்கு பணிபுரியும் டெய்லர் ஆனந்தி. அதே நிறுவனத்தில் பணிபுரியும் நபர் அன்பு. இதில் ஆனந்தியை அன்புவும் மகேஷும் ஒரு தலையாக காதலிக்கின்றனர். இதில் ஆனந்தி அன்புவை விரும்புகிறார். ஆனால், மகேஷ், ஆனந்தியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டு விடுகிறார். இதனால் மகேஷின் வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்