தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maharaja Ott: ரூ.100 கோடி வசூல் செய்த மகாராஜா.. ஓடிடியில் எப்போது? எங்கு பார்க்கலாம்?

Maharaja OTT: ரூ.100 கோடி வசூல் செய்த மகாராஜா.. ஓடிடியில் எப்போது? எங்கு பார்க்கலாம்?

Aarthi Balaji HT Tamil
Jul 08, 2024 11:08 AM IST

Maharaja OTT: 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ள மகாராஜா படத்தின் ஓடிடி வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.100 கோடி வசூல் செய்த மகாராஜா.. ஓடிடியில் எப்போது? எங்கு பார்க்கலாம்?
ரூ.100 கோடி வசூல் செய்த மகாராஜா.. ஓடிடியில் எப்போது? எங்கு பார்க்கலாம்?

ட்ரெண்டிங் செய்திகள்

விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக நடிப்பதாகட்டும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரமும் தனக்கு என ஒரு ஸ்டைலை நிரூபித்து உள்ளார்.

50 வது படமாக மகாராஜா

தனது 50 வது படமாக விஜய் சேதுபதி நடித்து இருக்கும் மகாராஜா ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. மேலும் இது பார்வையாளர்களுக்கு மீண்டும் தனது புதிய பக்கத்தைக் காட்டும் படம் என்று விஜய் சேதுபதி நம்புகிறார். இந்தப் படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார். 

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி.

ஒளிப்பதிவு இயக்குனராக தினேஷ் புருஷோத்தமன் பணிபுரிந்து உள்ளார். பி அஜனீஷ் லோக்நாத் இசையை கவனித்து உள்ளார். டிரைலரிலேயே இசை மிரட்டுகிறது.

பாடல் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, எடிட்டராக பிலோமின் ராஜ் பணிபுரிந்துள்ளார். இந்த ஆக்ஷன் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பணிபுரிந்துள்ளார். வசனத்தை நித்திலன் சாமிநாதன், ராம் முரளி ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

மகாராஜா படத்தில்

மகாராஜா படத்தில் மம்தா மோகன் தாஸ், நட்டி ( நட்ராஜ் , பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்து அசத்தி இருக்கிறார்கள்.

விமர்சனம்

மகாராஜா படத்த பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "நிதிலன் ஒரு மெதுவான த்ரில்லரை நமக்கு வழங்கியுள்ளது. முதல் பாதியில், பல கதாபாத்திரங்கள் விளையாடுவதைக் காண்கிறோம், அவை பொருத்தமற்றதாகத் தோன்றுகின்றன, ஆனால் நீங்கள் இடைவேளைக்கு வரும்போது, விளையாட்டில் பெரிய விஷயங்கள் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள். 

இரண்டாம் பாதியில் தான் நீங்கள் புள்ளிகளை இணைக்கத் தொடங்குகிறீர்கள், மகாராஜா ஏன் லட்சுமியைக் கண்டு பிடிப்பதற்கான இடைவிடாத பணியில் உறுதியான மனிதராக இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறீர்கள். அதற்கு பின் என்ன நடந்தது என்பதே கதை.

ஓடிடி ரிலீஸ்

மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளது. இப்போது ஜூலை 12 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.