Top Cinema News: ரூ. 17 கோடி முதலீட்டில் ரூ. 150 கோடி வசூல்..கங்குவா புதிய அப்டேட் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News: ரூ. 17 கோடி முதலீட்டில் ரூ. 150 கோடி வசூல்..கங்குவா புதிய அப்டேட் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: ரூ. 17 கோடி முதலீட்டில் ரூ. 150 கோடி வசூல்..கங்குவா புதிய அப்டேட் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 03, 2024 10:30 PM IST

Top Cinema News: ரூ. 17 கோடி முதலீட்டில் ரூ. 150 கோடி வசூல் ஈட்டிய தமிழ் படம், சூர்யாவின் கங்குவா புதிய அப்டேட், விக்ரமின் வீர தீர சூரா ரிலீஸ் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்ற பார்க்கலாம்

Top Cinema News: ரூ. 17 கோடி முதலீட்டில் ரூ. 150 கோடி வசூல்..கங்குவா புதிய அப்டேட் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News: ரூ. 17 கோடி முதலீட்டில் ரூ. 150 கோடி வசூல்..கங்குவா புதிய அப்டேட் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் சினிமா படங்களை தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நிறுவன தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டுக்காளி என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தயாரிப்பு நிறுவனப் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படத்துக்கும் ‘காஸ்டிங் ஏஜென்ட்டுகள்’ நியமிக்கப்படவில்லை.

இதுதொ டர்பாக வெளிவரும் மின்னஞ்சல்கள், செய்திகள், சமூக வலைதளப் பதிவுகளை நம்ப வேண்டாம். சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது

விக்ரமின் வீர தீர சூரன் பட ரிலீஸ் தகவல்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் வீர தீர சூரன். ஆக்சன் த்ரில்லர் கேங்கஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, வேட்டை முத்துக்குமார் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

கங்குவா இசை வெளியீடு தேதி

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெஷல் தீம் உடன் கங்குவா இசை வெளியீடு பிரமாண்டமாக நடைபெறும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

விபத்தில் இருந்து எஸ்கேப் ஆன பிரியங்கா மோகன்

தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே தொரூரில் உள்ள ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்வின்போது மேடை சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரியங்கா மோகன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரான ஜான்சி ரெட்டி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஜானி மாஸ்டருக்கு இடைக்கால் ஜாமின்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய விருதை வென்றிருக்கும் அவர் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையைன் படத்துக்கு தடை கோரி மனு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களின் கூட்டணியை வைத்து, இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள திரைப்படம் வேட்டையன். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தில் வரும் என்கவுன்டர் குறித்த வசனங்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

டாடா இயக்குநர் படத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி தற்போது நடித்திருக்கும் புதிய படமான பிரதர் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தவிர ஜீனி, காதலிக்க நேரமில்லை, தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

இதற்கிடையே டாடா படப்புகழ் கணேஷ் பாபு இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது

ரூ. 17 கோடிக்கு வாங்கப்பட்டு ரூ. 150 கோடி லாபம் ஈட்டிய மகாராஜா

விஜய்சேதுபதியின் 50வது படமான மகாராஜா நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ரூ. 17 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த படம் தற்போது வரை ரூ. 150 கோடி வரை லாபம் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் இந்த படம் வரவேற்பை பெற்றதால் லாபமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

முதல் முறையாக விஜய்யுடன் இணைந்த நடிகை

தளபதி 69 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டை படக்குழுவினர்கள் அடுத்தடுத்து வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி படத்தில் ஹீரோயின்களாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுதொடர்பாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மர்மதேசம் நாகா இயக்கும் புதிய வெப் சீரிஸ்

90ஸ்களில் பேமஸ் ஆன திகில் கலந்த த்ரில்லர் சீரியலான மர்மதேசம் தொடரை இயக்கிய நாகா புதிதாக

ஐந்தாம் வேதம் என்ற வெப் சீரிஸை இயக்குகிறார். மர்மதேசம் போல் திகல் கதையாக இருக்கும் இந்த வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது