Magizh thirumeni: ‘எங்கே போனார் மாஸ் அஜித்.. ஏன் இப்படி ஒரு ட்ரீட்மெண்ட்..’ - மகிழ் திருமேனி பேட்டி
Magizh thirumeni: நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றால், படம் முழுக்கவே அஜித் சார் அவரது ஸ்டார் அந்தஸ்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலேயே சில விஷயங்களை செய்து கொண்டே இருப்பார். - மகிழ் திருமேனி!

விடாமுயற்சி திரைப்படத்தில் மாஸான அஜித்தை பார்க்க முடியவில்லை என்று அஜித் ரசிகர்களில் சிலர் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கான காரணத்தை சன் நியூஸ் சேனலுக்கு மகிழ் திருமேனி அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.
ஏன் மாஸான அஜித்தை பார்க்க முடியவில்லை
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, ‘விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை, அஜித் சார் அவரது இமேஜை பற்றி ஒரு இடத்தில் கூட கவலைப்படவே இல்லை. அந்தக் கதாபாத்திரத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட மெனக்கடல் இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
நான் முதல் முறையாக அஜித் சாரை சந்திக்கும் பொழுது அவரை வைத்து ஒரு மாஸ் ஆக்சன் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால், அவர் சாமானியனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். ஊரை காப்பாற்றுகிற கதை, நாட்டைக் காப்பாற்றுகிற கதையெல்லாம் வேண்டாம் என்று மறுத்தார். அந்தத் திரைப்படம் எல்லா ரசிகர்களுக்கும் ஏற்புடையதாக அமைய வேண்டும் என்று கூறினார்.
நன்றாக பாருங்கள்
நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றால், படம் முழுக்கவே அஜித் சார் அவரது ஸ்டார் அந்தஸ்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலேயே சில விஷயங்களை செய்து கொண்டே இருப்பார். சமூகத்தில் இருக்கக்கூடிய ஒரு சாமானிய மனிதர் ஏதாவது ஒரு பிரச்சினையை சந்திக்கும் போது, அவமானத்தை எதிர்கொள்ளும் பொழுது, உறவு சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் பொழுது எப்படி அவன் அதற்கு பதில் கொடுப்பான் அப்படித்தான் இந்த படத்தில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அஜித் பதில் கொடுத்திருக்கிறார்.
அப்படி பதில் கொடுப்பதில், அவருக்கே உரித்தான இமேஜ் கீழே சென்றாலும், அதை பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அஜித் எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் இருக்க விருப்பப்படுகிறார். எப்போதுமே ஒரு மனிதரை நாம் தொடர்ந்து ஆராதிக்கிறோம் என்றால், அவரது அருகில் சென்று பார்க்கும் பொழுது அவரது உண்மையான சில குணங்கள் நமக்கு ஏமாற்றத்தை தரும். ஆனால் அஜித்திடம் இரண்டு வருடங்களாக பழகி இருக்கிறேன். அவர் பொதுவெளியில் எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் நிஜத்திலும் இருக்கிறார்.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்