Magizh Thirumeni: ‘அஜித் சார் நரைத்த முடியோட வர்றேன்னு சொன்னார்’ - வின்டேஜ் அஜித் உருவான கதை! -மகிழ்திருமேனி பேட்டி
Magizh Thirumeni: அஜித் சார், அந்த லுக்கில் வரும் போது, என்ன மாதிரியான ஒரு முனைப்போடு வருவார்? என்ன ஒரு தயார்படுத்துதலோடு வருவார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். - மகிழ் திருமேனி!

Magizh Thirumeni: ‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெற்ற அஜித்தின் ப்ளாக் ஹேர் லுக் பற்றியும், அஜித் அதனை அணுகிய விதம் குறித்தும் இயக்குநர் மகிழ் திருமேனி ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
நான்கு லுக்குகள்
இது குறித்து அவர் பேசும் போது, ‘படத்தில் ஏறக்குறைய அஜித் நான்கு காலகட்டங்களில் வருகிறார். அதில், 12 வருடங்களுக்கு முன்பான அஜித், 9 வருடங்களுக்கு முன்பான அஜித், 6 வருடங்களுக்கு முன்பான ஒரு அஜித், தற்போது இருக்கும் அஜித் என 4 லுக்குகள் இருக்கின்றன. இந்த நான்கு காலகட்டங்களும் படத்தினுடைய துவக்கத்திலேயே வந்து விடும்.
படத்தினுடைய முழு கதையையும் அஜித் சார் முன்பே கேட்டு விட்டதால், அவருக்கு இந்தந்த காலகட்டங்கள் இருக்கின்றன. அதற்கு இவ்வாறான தோற்ற அமைப்புகள் தேவை என்பது நன்றாகவே தெரியும். அதைப்பற்றி நானும், அவரும் நிறைய பேசினோம். அப்போது அஜித் சார் ஒரு லுக்கை ஃபிக்ஸ் செய்து வைத்திருந்தார்.
அஜித் சார், அந்த லுக்கில் வரும் போது, என்ன மாதிரியான ஒரு முனைப்போடு வருவார்? என்ன ஒரு தயார்படுத்துதலோடு வருவார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அஜித் சாருக்கு தன்னுடைய முடியை கலர் செய்வது சுத்தமாக பிடிக்காது. அவர் எந்த ஒரு போலித்தனமும் இல்லாத ஒரு மனிதர். அது நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, திரையிலும், அவருக்கு அப்படியான முன் தயாரிப்புகளில் பெரிதாக ஈடுபாடு கிடையாது.
நான் கதையை சொன்ன போதே
நான் ஆரம்பத்தில் இளம் வயது தோற்றத்தை பற்றி சொல்லும் பொழுதே, இப்பொழுது நிறைய இளைஞர்களுக்கு சிறுவயதிலேயே தலை நரைத்து விடுகிறது; அந்த மாதிரி வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். எனக்கு எப்பொழுதுமே சாரை நிர்பந்திப்பது பிடிக்காத ஒரு விஷயம்.
அஜித் சாருக்கான இடத்தையும் அவருக்கான மரியாதையும் எப்போதும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால், அவரிடம் இரண்டு முறை இந்த லுக் வேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொண்டேன். அதன் பின்னர் ஒரு நாள் அவர் நான் கேட்ட ப்ளாக் ஹேர் லுக்கில் அவர் வந்து நின்றார்; அதை பார்த்தபோது, நாங்கள் அனைவரும் அப்படியே உறைந்து போய் நின்றோம்’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்