Valentines Day: சென்னைப்பொண்ணுக்கு மதுரை பையனா?.. தொகுப்பாளர் ஏஞ்சலின் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்! - விபரம்!
Valentines Day: காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் இந்த வெப் தொடரில், தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Valentines Day: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, சென்னையின் பல்வேறு இடங்களில், ‘மதுரை பையனுக்கு தமிழ் பொண்ணு வேணும்’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. சரி, இப்போது எதற்காக இந்த விளம்பரம் என்ற ரீதியில் மக்கள் அதனை கடந்து சென்ற நிலையில், தற்போது அதற்கான பதில் கிடைத்திருக்கிறது.
வெப் சீரிஸ்
ஆம், இது ஒரு வெப் தொடருக்கான விளம்பரம். இந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் இந்த வெப் தொடரில், தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத்தொடரின் மூலமாக ஏஞ்சலின் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்
தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் மற்றும் நடிகருமான சசிக்குமார் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். விக்னேஷ் பழனிவேல் இயக்கி இருக்கும் இந்தத்தொடரை சஞ்சய் தயாரித்துள்ளார். இத்தொடர் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
மதுரை பின்னணியில்
வெப் தொடர் தொடர்பாக வெளியாகி இருக்கும் போஸ்டரில் சென்னைப்பெண்ணாக ஏஞ்சலின் நிற்க, மதுரை பையனாக கண்ணா ரவி, அவரது அருகில் ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரமும், தெப்பக்குளமும் பின்னணியில் இருக்கிறது. போஸ்டரைப் பார்க்கும் போது, மதுரை பின்னணியில் ஒரு சென்னைப்பெண்ணுக்கும், மதுரை பையனுக்கும் இடையேயான காதலை சொல்லும் தொடராக இந்தத்தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரின் மற்ற விவரங்கள் நடிகர்கள், டீசர் மற்றும் டிரெய்லர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏஞ்சலினா எஸ்.எஸ்.மியூசிக் யூடியூப் சேனலில் பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். விஜய் டிவியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். கண்ணா ரவி ‘கைதி’, ‘மண்டேலா’, ‘குருதி ஆட்டம்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்