தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madurai Mp Su Venkatesan Prime Minister Modi Bjp To Not Any Action For Madurai Aiims After 5 Years

Su Venkatesan: அடிக்கல் நாட்டி 5 வருஷமாச்சு; எய்ம்ஸ் இரண்டாவது செங்கல் எங்க?;பேப்பர் கட் போட்டு விமர்சனம் செய்த எம்.பி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 27, 2024 04:12 PM IST

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் வைத்து இன்றோடு 5 வருடங்கள் கழிந்துள்ளதையடுத்து, மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சனம் செய்திருக்கிறார்.

மதுரை எய்ம்ஸ்!
மதுரை எய்ம்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் அன்றைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

 

சுற்றுச்சுவரோடு நின்ற போன இந்த மருத்துவமனை கல்லுரிக்கான எம்பிபிஎஸ் இடத்துக்கான மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டது. இதில் தேர்வான 50 மாணவர்கள், மதுரையில் வகுப்பறை இட வசதியில்லாத காரணத்தால், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் வைத்து இன்றோடு 5 வருடங்கள் கழிந்துள்ளதையடுத்து, மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சனம் செய்திருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் எய்ம்ஸ் எங்கே?” என்று பதிவிட்டு இருக்கிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்