‘என்னிடம் துப்பாக்கி இருக்கு.. விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கவா?’ மதுரை ஆதீனம் ‘தெறி’ பேட்டி!
‘‘சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பற்றி கேளுங்கள் நான் பேசுகிறேன். சினிமாக்காரர்களை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் நான் எந்த நடிகரின் ரசிகரும் அல்ல. கையில் உள்ள 5 விரலும் ஒன்றவா இருக்கு.?’’

மதுரை வைகையாற்றை சுத்தப்படுத்துவதற்கு பணம் வேண்டும் என கூறி வழக்கறிஞர்கள் எனக் குறிப்பிட்டு சிலர் மதுரை ஆதீனம் மடத்திற்கு வந்ததாகவும், அப்போது பணம் தர ஆதீனம் மறுத்ததாகவும், பதிலுக்கு அவர்கள் தன்னை அவதூறாக பேசிவிட்டு மிரட்டி அவதூறாக பேசியதாக மதுரை ஆதினம் குற்றம் சாட்டினார். இது தொடர்பாகமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கூறியதாவது:
ஆதீனத்தை மிரட்டியது யார்?
வைகை ஆற்றை சுத்தம் செய்ய நாள் ஒன்று 15 ஆயிரம் பணம் கேட்டு வழக்கறிஞர்கள் 3 பேர் வந்தார்கள். 20 நாள் சுத்தம் செய்யணும், அந்த பணத்தை நீங்கள் தரவேண்டும் என்று கேட்டதற்கு முடியாது என்றேன். அரசாங்கம் இருக்கு, மாவட்ட ஆட்சியர் இருக்கிறார் அனைவரும் சேர்ந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் தனிமரம் தோப்பாகாது உங்களால் செய்ய முடியாது. இதற்கு முன் இருந்த ஆதினம் எங்களுக்கு கொடுத்தார் என்று கூறினார்கள்.
அதற்கு நான், இதே போல்தான் பல வழக்கறிஞர்கள் அவரை ஏமாற்றி விட்டு சென்றனர். அதனால் உங்களுக்கு கொடுக்க முடியாது என்றேன். உடனடியாக அவர்கள் என்னை தாறுமாறாக அவதூறாக பேசி ஆதினமாக இருப்பதற்கு எனக்கு தகுதி இல்லை என கூறினார்கள். உங்க வீட்டிற்கு வந்து உனக்கு தலைவனாக இருக்க தகுதி இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும் உங்களுக்கு, அந்த மாதிரி எனக்கு இருந்தது.