Madrasapattinam : போராட்ட களத்தில் பூத்த காதல்! பரிதிக்காக காத்திருக்கும் தொரையம்மா! மயிலிறகால் வருடிய மதராசப்பட்டினம்!
Madrasapattinam : போராட்ட களத்தில் பூத்த காதல்! பரிதியை தேடிவரும் தொரையம்மா, மயிலிறகால் வருடிய மதராசப்பட்டினம் படம் கால் நூற்றாண்டை நெருக்கும் வேளையில் அதுகுறித்து பார்க்கலாம்.

இளம்பரிதி - தொரையம்மா
இளம்பரிதி என்ற நபரைத் தேடி லண்டனில் இருந்து வரும் வயதான மூதாட்டி எமி வில்கின்சன், கிட்டத்தட்ட தன் மரணத்தருவாயில் சென்னை வருவார். அப்போது பல ஆண்டுகளுக்கு முன் அவர் பார்த்த சென்னை முற்றிலும் மாறியிருக்கும். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சென்ற 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அவர் இந்தியாவைவிட்டு சென்றிருப்பார். அவர், இளம் பரிதியின் தாயின் தாலியை திருப்பிக்கொடுக்க வந்திருப்பார்.
அடையாளமாய் தாலி
அந்த தாலியை இளம்பரிதி அவர்களின் காதலின் அடையாளமாக அவருக்கும் பரிசளித்திருப்பார். ஆனால், அவர்களின் காதல் பிரிட்டிஷ்க்காரர்களுக்கு தெரிந்துவிடும். அவர்கள் இந்தியாவைவிட்டுச் செல்லும்போது இவர்களின் காதல் பிரிக்கப்பட்டிருக்கும். அவர் லண்டன் சென்றுவிட்டு வேறு ஒருவரை மணந்து அவருக்கு குழந்தைகளும் பிறந்து, பேத்தியுடன் இந்தியாவில் அவர் விட்டுச்சென்ற காதலை தேடி வந்திருப்பார்.
இளம்பரிதி ஒரு சலவைத் தொழிலாளி, எமிக்கும் இவருக்கும், இந்தியாவில் அவர் தங்கியிருந்த காலத்தில் காதல் மலர்ந்திருக்கும். பரிதியாக ஆர்யா, எமியாக ஏமி ஜாக்சன் இருவரும் நடித்திருப்பார்கள். இவர்களின் காதல் காட்சிகள், எமிக்காக பரிதி ஆங்கிலம் கற்பதும், பரிதிக்காக எமி தமிழ் கற்பதும் என அவர்களின் காதல் வளர்ந்துகொண்டே செல்லும்.