தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suchitra Vs Karthik Kumar: ’ஓரினச்சேர்க்கை விவகாரம்!’ கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுஜித்ராவுக்கு இடைக்கால தடை!

Suchitra vs Karthik Kumar: ’ஓரினச்சேர்க்கை விவகாரம்!’ கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுஜித்ராவுக்கு இடைக்கால தடை!

Kathiravan V HT Tamil
May 24, 2024 03:11 PM IST

Suchitra vs Karthik Kumar: நடிகர் கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுஜித்ராவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.

’ஓரினச்சேர்க்கை விவகாரம்!’ கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுஜித்ராவுக்கு இடைக்கால தடை விதிப்பு!
’ஓரினச்சேர்க்கை விவகாரம்!’ கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுஜித்ராவுக்கு இடைக்கால தடை விதிப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

சுஜித்ராவுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு 

தன்னை பற்றி பாடகி சுஜித்ரா தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு தடை கேட்டும், சுஜித்ராவிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு அவரது முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

ஒரு கோடி கேட்டு கார்த்திக் குமார் வாதம் 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன் நடைபெற்ற இந்த விசாரணயில், யூடியூப் தளங்களில் பாடகி சுஜித்ரா, ‘நடிகர் கார்த்திக் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியதாகவும், இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. பாடகி சுஜித்ராவிடம் இருந்து ஒரு கோடி மான நஷ்ட ஈடாக தர வேண்டும்’ என்றும் கார்த்திக் குமார் தரப்பில் வாதிடப்பட்டது. 

பாடகி சுஜித்ராவுக்கு இடைக்கால தடை 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுஜித்ராவுக்கு இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் விதித்து உள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய சுஜித்ரா பேட்டி 

ஸ்டாண்ட் அப் காமெடியன், நடிகராக இருந்து வருபவர் கார்த்திக் குமார். இவரது முன்னாள் மனைவியும், ஆர்ஜே, நடிகையுமான சுஜித்ரா, கார்த்திக் குமார் மீது பல்வேறு குற்றாச்சாட்டுகளை முன் வைத்தார். அதில், "ஓரினச்சேர்க்கையாளராக வெளிவர அவருக்கு தைரியம் இல்லை. திருமணமான இரண்டு வருடங்களில் நான் அதை கண்டு பிடித்தேன்.

திருமணமான முதல் ஆண்டு எனக்கும், கார்த்திக் குமாருக்கும் குழந்தை இல்லை என்பதால் மருத்துவரிடம் சென்றோம். அப்போது மருத்துவர் என் கணவர் ஓரினச்சேர்க்கையாளரா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று என்னிடம் கேட்டார்.

இதன் பிறகு அவர் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பழகுவதை நான் கவனித்தேன். அடிக்கடி மும்பை சென்றுவிடுவார்" என்றார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

அத்துடன் தனது பேட்டியில் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு குறித்து பேசியிருந்தார். இந்த சூழ்நிலையில் கார்த்திக் குமார் பேசிய விடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் வெட்கப்பட போவதில்லை

நடிகர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த விடியோவில், "நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாகவே கருதுகிறேன்.

நான் செய்ய உத்தேசித்திருக்கும் விஷயத்தில், எந்த நகரத்திலு் எங்கு வேண்டுமானாலும் அதற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொள்வேன். அனைத்து பாலினங்களுக்கும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே" என்று தெரிவித்து இருந்தார். 

கார்த்திக் குமாரின் இந்த திடீர் விடியோ ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சுசித்ராவின் கருத்துக்கு பதிலாகவே அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் கருத்துகள் பகிரப்பட்டது.

இதனை அடுத்து நடிகர் கார்த்திக் குமார் பாடகி சுஜித்ராவின் பேச்சை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்