Trisha: பக்கத்து வீட்டில் சண்டைக்கு போன திரிஷா... முடிச்சு விட்ட கோர்ட்... என்ன நடந்தது?-madras high court closed actress trisha case - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha: பக்கத்து வீட்டில் சண்டைக்கு போன திரிஷா... முடிச்சு விட்ட கோர்ட்... என்ன நடந்தது?

Trisha: பக்கத்து வீட்டில் சண்டைக்கு போன திரிஷா... முடிச்சு விட்ட கோர்ட்... என்ன நடந்தது?

Malavica Natarajan HT Tamil
Sep 24, 2024 02:09 PM IST

Trisha: தனது வீட்டின் அருகில் வசிப்பவர் மதில் சுவர் கட்டியதால், தனது வீட்டின் கட்டமைப்பு பாதிப்பதாகக் கூறி நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முடித்து வைத்துள்ளது.

Trisha: பக்கத்து வீட்டில் சண்டைக்கு போன திரிஷா... முடிச்சு விட்ட கோர்ட்... என்ன நடந்தது?
Trisha: பக்கத்து வீட்டில் சண்டைக்கு போன திரிஷா... முடிச்சு விட்ட கோர்ட்... என்ன நடந்தது?

இந்நிலையில், நடிகை திரிஷா மதில் சுவர் தொடர்பாக அளித்த வழக்கு ஒன்று முடித்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், திரிஷா என்ன வழக்கு தொடர்ந்தார். அவருக்கு என்ன ஆனது என தொடர்ந்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், சென்னையிலுள்ள அவரது வீட்டின் மதில் சுவரை இடிக்க அண்டை வீட்டார் முடிவு செய்தது தெரியவந்தது.

என்ன பிரச்சனை

சென்னை செனடாப் ரோட்டில் திரிஷாவின் வீடு உள்ளது. இதற்கு அருகில் உள்ள வீட்டை மெய்யப்பன் என்பவர் கடந்த ஆண்டு அதாவது 2023ம் ஆண்டு வாங்கியுள்ளார். பின் அவர், அந்த வீட்டின் கட்டுமான அமைப்பை மாற்றி அமைக்க விரும்பினார். இதற்காக திரிஷாவின் வீட்டிற்கும், மெய்யப்பனின் வீட்டிற்கும் பொதுவாக இருந்த மதில் சுவரை இடிக்க முற்பட்டுள்ளார். ஆனால், இதற்கு திரிஷா தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை திரிஷா தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்தனர். அந்த வழக்கில், மதில் சுவரை இடிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவு

பின் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

சமாதானக்கொடி

இந்த நிலையில், இவ்விவகாரம் நீண்டு கொண்டே சென்றதால், திரிஷா தரப்பும், மெய்யப்பன் தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் இருவரும் சமாதானம் ஆகியுள்ளனர். இதற்கு இடையில், இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் அடைந்து விட்டதாகவும், பிரச்சனையை சமரசமாக முடித்து விட்டதாகவும் கூறியுள்ளனர். இதனால், நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

நடிகை திரிஷா, சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன், லியோ போன்ற திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இவர் தற்போது திரையரங்கில் வெளியாகி ஹிட் அடித்த நடிகர் விஜய்யின் கோட் படத்தில் கௌரவ தோற்றத்தில் வந்து மட்ட எனும் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். அதன் வீடியோ வெர்ஷன் பாடலை நேற்று படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், திரிஷாவின் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக வந்த செய்தி அவரது ரசிகர்களை பரபரப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner