Vikram Vedha: விக்ரமாதித்தியன் - வேதாளம் கதையின் மாடர்ன் வெர்ஷன்! ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி - மாதவன் காம்போ
விக்ரமாதித்தியன் - வேதாளம் கதையின் மாடர்ன் வெர்ஷன் ஆக அமைந்த விக்ரம் வேதா திரைப்படம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹி்டடானது. விஜய் சேதுபதி - மாதவன் காம்போ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

விஜய் சேதுபதி சால்ட் அண்ட் பெப்பர் லுக், வித்தியாசமான ட்ரெய்லர் என எதிர்பார்ப்பை எகிற வைத்து அதை சிறப்பாக பூர்த்தி செய்த படம் விக்ரம் வேதா. நியோ நோயர் என சொல்லப்படும் சினிமா பாணியில் உருவான ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் முதல் முறையாக இணைந்து நடித்திருப்பார்கள்.
மணிகண்டன், விவேக் பிரசன்னா, கதிர், ஹரீஷ் பேரடி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி கதையின் நாயகிகளாக நடித்திருப்பார்கள்.
கேங்ஸ்டர் - போலீஸ் கண்ணாம்மூச்சி விளையாட்டு
தலைமறைவாக இருக்கும் கேங்ஸ்டராக இருக்கும் வேதாவை, (விஜய் சேதுபதி) போலீசான விக்ரம் (மாதவன்) என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார். ஆனால் வேதா தானாக முன்வந்து சரணடைக்கிறார். அப்போது கஸ்டடியில் வேதா, விக்ரமிடன் மூன்று கதைகளைச் சொல்கிறாள்.
அதில் இருக்கும் முடிச்சுகளும் அவற்றால் நிகழும் திருப்புமுனையும், வேதாவின் நியாயங்களும் வெளிப்படுகிறது. இறுதியில் விக்ரம், வேதாவை என்ன செய்கிறார் என்பதை சீட் நுனி த்ரில்லர் படமாக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
விக்ரமாதித்யன் - வேதாளம் கதையை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கும். சுருக்கமாக அதன் மாடர்ன் வெர்ஷனாகவே இது இருந்தது.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கி விஜய் சேதுபதி
கேங்ஸ்டராக வரும் விஜய் சேதுபதி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உடலும் கொஞ்சம் குண்டாகி ரியல் தாதா போன்ற லுக்கில் மாறியிருப்பார். படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது. ஆனாலும் அவரை மையப்படுத்திய படத்தின் மொத்த கதையும் அமைந்திருக்கும்.
வட சென்னை பின்னணியில் மிகவும் ரியலான லொக்கேஷன்களில் வரும் படத்தின் காட்சிகளும், விஜய் சேதுபதியின் யதாராத்தமான நடிப்பும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தன. விஜய் சேதுபதிக்கே உண்டான சில டிரேட்மார்க் காட்சிகளும் கிளாப்ஸ்களை அள்ளின. புரோட்டா சாப்பிடுவது எப்படி என அவர் சொல்லி கொடுக்கும் காட்சி ரசிக்கும் விதமாகவும், முக்கியமான கட்டத்தில் படத்தின் திருப்புமுனையாகவும் இருக்கும்
ஆக்ஷன் ப்ளஸ் ரெமான்ஸில் கலக்கிய மாதவன்
போலீஸ் ஆபிசராக வரும் மாதவன் விறுப்பான ஆக்ஷன் காட்சிகளிலும், அவரது மனைவியாக வரும் ஷ்ரத்தாவுடன் மோதல், காதல் எனவும் நடிப்பில் வெரைட்டி காட்டியிருப்பார். போலீஸ் ஆபிசராக வந்தாலும் படம் முழுக்க யுனிபார்ம் இல்லாமலேயே தோன்றியிருப்பார்.
விஜய் சேதுபதி - மாதவன் காம்போ காட்சிகள் அனைத்தும் தெறிக்க விடும் விதமாக வசனங்களுடன் மாஸ்ஸாக அமைந்திருந்தன. படத்தின் ஆரம்ப காட்சியாக மாதவன், விஜய் சேதுபதி விசாரணை சீன் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கும்.
காமெடி, காமெடி கலந்த வில்லத்தனம் என நடிப்பில் கலக்கி வந்த விவேக் பிரசன்னா இந்த படத்தில் சைலண்ட் வில்லனாக முத்திரை பதித்திருப்பார். அதேபோல் ஹரீஷ் பேரடியும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.
பட்டையை கிளப்பிய சாம் சி.எஸ். இசை
படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் கதையுடன் இயல்பாக பயணிக்கும் விதமாக சாம் சி.எஸ் பட்டைய கிளப்பியிருப்பார். படத்தில் இடம்பிடித்த யாஞ்சி யாஞ்சி என்ற மெலடி பாடல் பலரது ரிங்டோனாக ஒலித்துக்கொண்டிருகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக ரசிகர்கள் கவர்ந்த இந்த படம் வசூலிலும் பட்டையை கிளப்பி ஆண்டின் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. நியோ நோயர் பாணி படங்களில் வரிசையில் தனித்துவ இடத்தை பிடித்திருக்கும் விக்ரம் வேதா வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்