தமிழ் சினிமா ரீவைண்ட்: பாலசந்தர் - பாரதிராஜா இணைந்து நடித்த ஒரே படம்! ஏப்ரல் 23 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: பாலசந்தர் - பாரதிராஜா இணைந்து நடித்த ஒரே படம்! ஏப்ரல் 23 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

தமிழ் சினிமா ரீவைண்ட்: பாலசந்தர் - பாரதிராஜா இணைந்து நடித்த ஒரே படம்! ஏப்ரல் 23 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 23, 2025 05:30 AM IST

ஏப்ரல் 23ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் மாதவன் நடித்த ஆக்சன் த்ரில்லர் படம் தவிர பெரிய ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இயக்குநர் சிகரம் பாலசந்தர் - இயக்குநர் இமயம் பாரதிராஜா இணைந்து நடித்த ஒரே படம் வந்துள்ளது. இந்த நாளில் முந்தைய ஆண்டுகளில் வெளியாகி கவனம் ஈர்த்த படங்களை பற்றி பார்க்கலாம்

பாலசந்தர் - பாரதிராஜா இணைந்து நடித்த ஒரே படம்! ஏப்ரல் 23 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
பாலசந்தர் - பாரதிராஜா இணைந்து நடித்த ஒரே படம்! ஏப்ரல் 23 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

ரெட்டைச்சுழி

தாமிரா இயக்கத்தில் மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் ஆரி அர்ஜுனன், அஞ்சலி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ட்ராமா பாணியில் உருவாகி 2010இல் வெளியான படம் ரெட்டைச்சுழி. கிராமத்து பின்னணியில் உருவாகியிருந்த இந்த படம் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான் இயக்குநர்கள் இணைந்து நடித்த படமாக இருந்ததால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் வலுவான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சிமைப்புகள் இல்லாத காரணத்தால் எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொண்டது.

இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா கதாபாத்திர படைப்பும், அவர்களது நடிப்பு சிறப்பாக இருந்தபோதிலும் திரைக்கதை ரசிக்கும் படியாக இல்லாமல் படம் தோல்வியை தழுவியது. இந்த இரண்டு இயக்குநர்கள் இணைந்து நடித்த முதலும், கடைசியுமான படமாக இது அமைந்தது.

எதிரி

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் மாதவன், சதா, விவேக், ரஹ்மான், டெல்லி கணேஷ், கனிகா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க காமெடி கலந்த ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகி 2004இல் வெளியான படம் எதிரி. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதியில் ஆக்சன் என்கிற பேக்கேஜில் அமைந்திருந்த இந்த படம் சிறந்த பேமிலி எண்டர்டெயினராக இருந்தது. மாதவன் - விவேக் காம்போவின் காமெடிக்கள் வயிற்றை புண்ணாக்கும் விதமாக இருந்தன. பாட்டில் மணி என்ற கேரக்டரில் போலி ரவுடியாகவும், பின்னர் காதலியை காப்பற்றும் கேரக்டரிலும் மாதவன் தோன்றியிருப்பார்.

மாதவன் நடித்த மாஸ் படமாகவும் அமைந்த எதிரி ஹிட் படமாகவும் மாறியது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சைதானே, முதல் முதலாக, இச்சு தாறியா, காதல் வந்து தீண்டும் போது போன்ற பாடல்கள் அந்த காலகட்டத்தில் ரீப்பீட் மோடில் கேட்கப்பட்டன. யுவன் ஷங்கர் ராஜா பீக்கில் இருந்த போது வந்த எதிரி படத்தின் பாடல்கள் தற்போது Underrated எனவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் ரஹ்மானுக்கு கம்பேக்காக அமைந்த நிலையில், படத்தில் அவர் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட அங்கும் வரவேற்பை பெற்றது.

2004இல் மாதவன் நடிப்பில் எதிரி, ஆய்த எழுத்த ஆகிய படங்கள் வெளியாகின. இதில் ஆய்தஎழுத்து படத்தில் வில்லனாக நடித்திருப்பார். மாதவன் நடித்த இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இது தவிர நத்திங் பட் லைஃப் என்ற இங்கிலீஷ் படத்திலும், மேட் இன் யுஎஸ்ஏ என்ற மலையாள படத்திலும் நடித்தார் மாதவன்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.