Madha Gaja Raja: விட்டுக்கொடுத்தாரா விஷால்.. மாஸ் காட்டியதா மதகஜராஜா? - முதல் நாள் வசூல் எம்புட்டு தெரியுமா?
விஷால் நடிப்பில், இயக்குநர் சுந்தர் .சி இயக்கத்தில் நேற்று வெளியான மதகஜராஜா திரைப்பட எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்க்கலாம்

சுந்தர் சி- விஷால் கூட்டணியில் உருவாகி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டின் பொங்கல் ரிலீஸாக மதகஜராஜா திரைப்படம் நேற்றைய தினம் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அந்தப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் விபரங்களை பார்க்கலாம்.
படத்தின் கலெக்ஷன் எவ்வளவு
மதகஜராஜா திரைப்படம் வெளியான நேன்றைய தினம், 3 கோடி ரூபாய் வசூல் செய்த செய்திருக்கிறது. காலையில் படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்ட நிலையில், அதன் மூலமாக மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்தது. தமிழ்நாட்டில் இந்தப்படத்திற்கு போட்டியாக வேறு எந்தப்படங்களும் சோபிக்க வில்லை; தெலுங்கில் கேம் சேஞ்சர் மற்றும் டாகு மகாராஜ் போன்ற திரைப்படங்கள் போட்டிப்படங்களாக இருந்த போதும் மதகஜராஜா படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முன்னதாக, மதகஜராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், கைநடுக்கத்துடன் காணப்பட்டார். இதையடுத்து அவரது உடல் கடுமையாக நலிவுற்றதாகவும், அவன் இவன் படத்தில் அவர் மாறுகண் வைத்து நடித்ததும், அதன் காரணமாக முளைத்த கெட்ட பழக்க வழக்கங்களுமே இதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.
விளக்கம் கொடுத்த விஷால்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், ‘இது 12 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற படம் மாதிரியே தெரியல. புதுப்படம் மாதிரி இருக்கு. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள். எல்லோரும் நல்லபடியா குடும்பத்துடன் சந்தேஷமா கொண்டாடுங்க.
எனது உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்ல
தமிழ்நாடு மட்டுமல்ல, கனடாவில் இருந்து கூட எனக்கு போன் கால் வந்தது. நான் அப்போலோவில் அட்மிட் ஆகியிருக்கேன்னு என் உடலநிலை குறித்து தப்பான தகவல்கள் வெளிவந்தது. அப்படிலாம் ஒன்னும் இல்லை. எனக்கு கடுமையான காய்ச்சல் தான். அன்னைக்கு என்னால முடியல. ஆனாலும் இத்தனை வருஷம் கழித்து படம் வருது. சுந்தர் சி சார் முகம் பார்க்கணும், அந்த ஃபங்கஷனை மிஸ் செய்ய கூடாதுன்னு எப்படியாவது முடிஞ்ச அளவு அட்டெண்ட் செஞ்சேன்.
எனது உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை. நண்பர்கள், பேன்ஸ் என எல்லோரும் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அனைவருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன். நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுமக்கள், மீடியாவை பொறுத்தவரைக்கும் என்னால் யூகிக்க முடியல. இன்னும் ஏராளமான மெசேஜ்க்கு ரிப்ளை கொடுக்கணும். எல்லா ஸ்டேட்டில் இருந்து போன் செய்து உடல் நிலை குறித்து கேட்டார்கள். Get well soon, Come back என கேட்டபோது இப்போது சொந்த காலில் நிற்கிறேன்.அனைத்து ஊடக நண்பர்களுக்கு நன்றிகள். நான் வார்த்தையால் சொல்ல முடியாது. படங்கள் மூலமாதான் சொல்ல முடியும்.
முகத்தை பார்த்தாலே தெரிகிறது
நானும், சுந்தர் சி சாரும் இந்த படத்துக்கான கதவு எப்போ திறக்கும்னு பல வருஷமாக பேசியிருக்கோம். கனவு நனவாகியிருப்பது உண்ர்ச்சிகரமான தருணம். எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. இந்த வெற்றி, சுந்தர் சி சாரையே சேரும். அவர் சிறந்த கமர்ஷியல் பட இயக்குநர். எங்களது காம்பினேஷனில் இந்த படம் பொங்கலுக்கான சரியான படமாக இருக்கும். காசு செலவு செஞ்சதுக்கு சந்தோஷமா குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும்.
முதல் காட்சி முடிஞ்சதும் படம் நல்லா இருக்குன்னு எல்லோரும்சொல்வாங்க. சண்டகோழிக்கு பின்னர் மதகஜராஜா என்னோட ஃபேவரிட் படம். ஒரு ஃபெஸ்டிவலில் ஃபெஸ்டிவல் படத்தை கொடுத்தது கடவுளா அமைச்சு கொடுத்தது. எட்டு நாள் லீவு இருக்கிறது, ஆக, குடும்பத்துடன் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு தரமான படமாக இந்தப்படம் இருக்கும் என நம்புகிறேன். நீங்கள் கொடுத்த அன்பு, ஆதரவை மனசில் ஏற்றிக்கொண்டேன். பொறுப்பும் வந்திருக்கு. என்னாலே முடிந்தால் ஒவ்வொருத்தரையு் கட்டிப்புடித்து நன்றி சொல்வேன்" என்றார்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்