66 years of Maalaiyitta Mangai:மனோரமா அறிமுகமான படம்..பாடல்களால் அதிரவைத்த கண்ணதாசன்..மறக்க முடியுமா? ‘மாலையிட்ட மங்கை’
66 years of Maalaiyitta Mangai: ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்து உலக சாதனை படைத்த ஆகச்சிறந்த நடிகை மனோரமா அறிமுகமானதும் இந்த திரைப்படம் தான்.

தமிழ் சினிமா இன்றைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். சில திரைப்படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் ரசிகர்கள் மனதில் இடம்பெறுவது உண்டு.
'மாலையிட்ட மங்கை'.
மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட எத்தனையோ திரைப்படங்கள் தமிழ் சினிமாவை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்ற. அந்த வரிசையில் பல சிறப்புகளைத் தன்வசம் வைத்துள்ள திரைப்படம் தான் 'மாலையிட்ட மங்கை'.
ஆச்சி மனோரமா அறிமுகம்
சரத் சந்திர சட்டோபாத்யாயா என்ற ஆசிரியர் எழுதிய சந்திரநாத் என்ற நாவலைத் தழுவி இந்த 'மாலையிட்ட மங்கை' திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்து உலக சாதனை படைத்த ஆகச்சிறந்த நடிகை மனோரமா அறிமுகமானதும் இந்த திரைப்படம் தான். டி.ஆர்.மகாலிங்கம், பண்டரிபாய், மைனாவதி, பத்மினி பிரியதரிசினி, காகா ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியோடு தானே தயாரிக்கவும் செய்திருந்தார் என்பது கூடுதல் சிறப்பு.