M. S.Viswanathan: மெல்லிசை மன்னன்.. திரையிசை சக்கரவர்த்தி எம்.எஸ். விஸ்வநாதன் நினைவு தினம் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  M. S.viswanathan: மெல்லிசை மன்னன்.. திரையிசை சக்கரவர்த்தி எம்.எஸ். விஸ்வநாதன் நினைவு தினம் இன்று

M. S.Viswanathan: மெல்லிசை மன்னன்.. திரையிசை சக்கரவர்த்தி எம்.எஸ். விஸ்வநாதன் நினைவு தினம் இன்று

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 14, 2023 05:00 AM IST

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட வில்லை என்று மத்திய அரசுகள் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. இந்நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதா எம்எஸ்விக்கு சாதனைகளை கவுரவப்படுத்தும் வகையில் திரையிசை சக்கரவர்த்தி என்று பட்டம் அளித்தார்

எம்.எஸ்.விஸ்வநாதன்
எம்.எஸ்.விஸ்வநாதன்

இசை உலகின் இமயம் எம்.எஸ்.விஸ்வநாதன் கேரள மாநிலம் பாலக்காட்டில்1928ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி சுப்ரமணி நாயர் நாராயணி தம்பதியின் மகனாக பிறந்தார். இவரது 4 வயதிலேயே இவரது தந்தை காலமானார். இதனால் இளம் வயதிலேயே கடும் வறுமையால் பாதிக்கப்பட்டார். இதனால் எம்.எஸ்.விஸ்வநாதன் குடும்பம் இளம் வயதில் அவர் மாமா வீட்டில் தங்கி இருந்தது. சிறுவயதில் குடும்பத்தில் எந்த வருமானமும் இல்லாததால் திரையரங்கில் குளிர்பானம் விற்றார். இப்படி திரையரங்கிலேயே சுற்றியவருக்கு இயல்பாக இசை மீது ஆர்வம் திரும்பியது.

அவர் நடிகராகவும் பாடகராகவும் வேண்டும் என்று விரும்பினார். ஆரம்பத்தில் ஜூபிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில் நடித்திருந்தார். ஆனால் நடிப்பில் அவரால் சோபிக்க முடியவில்லை. இதையடுத்து மெதுவாக அவரது ஆர்வம் இசை பக்கம் திரும்பியது. அப்படி ஆரம்பித்த அவரது இசைப்பயணம் தமிழ் சினிமாவில் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைக்க வைத்தது.

மலையாளத்தில் 80 திரைப்படங்களுக்கும் , தெலுங்கில் 30 திரைப்படங்களுக்கும், கன்னடத்தில் 15 திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இவர் கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன்-பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விஸ்வநாதன். வி.குமார், இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் குமார் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

மகிழ்ச்சி, சோகம், ரௌத்திரம், இயலாமை, ஏமாற்றம், துள்ளல் மகிழ்ச்சி போன்ற உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் மனதிற்கு நெருக்கமாக இசை அமைத்தவர் எம்எஸ்.வி. இசைஞானி இளையராஜா எம்.எஸ்.வி யிடம்தான் ஆரம்பத்தில் இணைந்து பணியாற்றினார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி, ஜெயராம், ஜானகி, ஜேசுதாஸ் போன்ற பாடகர்கள் எம்எஸ் விஸ்வநாதனின் இசைப்பட்டறையில் இருந்தே அறிமுகமாகினர். இவர் தன் சொந்த இசையில் 500க்கும் மேற்பட்ட பாடல்களில் பாடி இருந்தார்.இவருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட வில்லை என்று மத்திய அரசுகள் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.

இந்நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதா எம்எஸ்விக்கு சாதனைகளை கவுரவப்படுத்தும் வகையில் திரையிசை சக்கரவர்த்தி என்று பட்டம் அளித்தார். மேலும் அவருக்கு 60 தங்க காசுகளுடன் ஒரு காரையும் பரிசாக வழங்கினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகாலம் தமிழ் ரசிகர்களை தன் விரல் நுனியில் வைத்திருந்த எம்.எஸ். விஸ்வநாதன் 2015 ஜூலை14ம் நாள் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். எம்எஸ்வியின் நினைவு நாளான இன்று இந்துஸ்தான் டைம் தமிழ் அவர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.