'வைரமுத்துவ பத்தின உண்மை மக்களுக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவரு அமைதிப்படை சத்யராஜ் மாதிரி'- பாலாஜி பிரபு ஆதங்கம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'வைரமுத்துவ பத்தின உண்மை மக்களுக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவரு அமைதிப்படை சத்யராஜ் மாதிரி'- பாலாஜி பிரபு ஆதங்கம்

'வைரமுத்துவ பத்தின உண்மை மக்களுக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவரு அமைதிப்படை சத்யராஜ் மாதிரி'- பாலாஜி பிரபு ஆதங்கம்

Malavica Natarajan HT Tamil
Dec 15, 2024 02:07 PM IST

பாடலாசிரியர் வைரமுத்து அமைதிப்படை சத்யராஜ் மாதிரி தன்னோட செல்வாக்கு உயர உயர ஆளே மாறிட்டாரு என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.

'வைரமுத்துவ பத்தின உண்மை மக்களுக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவரு அமைதிப்படை சத்யராஜ் மாதிரி'- பாலாஜி பிரபு ஆதங்கம்
'வைரமுத்துவ பத்தின உண்மை மக்களுக்கு தெரிஞ்சே ஆகணும்.. அவரு அமைதிப்படை சத்யராஜ் மாதிரி'- பாலாஜி பிரபு ஆதங்கம்

ஆனால், சில ஆண்டுகளாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வைரமுத்து மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், அவர் தனது புகழுக்காக முதல் படம் குறித்த தகவல்களையே மொத்தமாக மறைத்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.

வைரமுத்துவின் முதல் படம் எது?

வைரமுத்துவை தமிழ் சினிமா நிழல்கள் படம் மூலம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது என பல ஆண்டுகளாக நம்பப் பட்டு வருகிறது. பாராதிராஜா- இளையராஜா கூட்டணியில் 3வதாக வந்து வைரமுத்து நிழல்கள் படத்திற்கு பின் இணைந்து கொண்டார் என பலரும் கூறி வருகின்றனர்.

ஏன், வைரமுத்து கூட அவரது மனைவிக்கும் தனக்கும் ஒரே சமயத்தில் பிரசவமானது. அவர் பிள்ளையை பிரசவித்தார், நான் பாடல்களை பிரசவித்தேன் எனக் கூறியிருப்பார். இந்நிலையில், இந்த கூற்றுக்களே முற்றிலும் தவறானது எனக் கூறுகிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. இதுகுறித்து அவர், MEDIA CIRCLE எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

வாய்ப்பளித்தது என் தந்தை தான்

அந்தப் பேட்டியில்,"வைரமுத்து சினிமாவில் வாய்ப்பு தேடி பாரதிராஜாவை சந்தித்து கவிதை தொகுப்புகளை கொடுத்தது எல்லாம் உண்மை தான். ஆனால், பாரதிராஜா நிழல்கள் படத்தில் வைரமுத்துவிற்கு வாய்ப்பு தருவதற்கு முன்பே அவருக்கு வாய்ப்பளித்தது எனது தந்தை பாஸ்கர் தான்.

என் தந்தை ஆஸ்கார் மூவிஸ் நிறுவனம் சார்பில் முதலில் தயாரித்து இயக்கிய படம் சூலம். இந்தப் படத்தின் டைட்டில் பாடலையும், இன்னொரு பாடலை எழுதியது வைரமுத்து. இந்த பாடல்களை எழுதியதற்காகத் தான் முதன் முதலில் சம்பளம் வாங்கினார்.

இளையராஜா பரிந்துரை

இந்தப் படத்திற்காக 2 பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி கொடுத்துவிட்டு அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால், இந்தப் படத்திற்கு இன்னும் சில பாடல்கள் தேவை எனத் தெரிந்ததால், என் அப்பா அந்தப் படத்தின் இசையமைப்பாளராக இருந்த இளையராஜாவிடம் இதுபற்றி கூறி உள்ளார்.

அப்போது, இளையராஜா தான் வைரமுத்துவை என் தந்தையிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இவர் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் நன்றாக பாடல் எழுதுவார் எனக் கூறியதும். என் தந்தையும் அவரையே பாடலாசிரியராக சம்மதித்தார்.

வைரமுத்துவின் முதல் பாடல்

இதையடுத்து, இளையராஜாவின் இசைக்கு தகுந்தாற்போல வைரமுத்துவும் ஜூலி ஜூலி, சூலம் சூலம் என்ற 2 பாடல்களை எழுதிக் கொண்டு வந்தார். அப்போதே பாடல்களும் கம்போஸ் செய்யப்பட்டது. பின், உடனிடியாக வைரமுத்துவிடம் பாடலுக்கான பணமும் கொடுக்கப்பட்டது.

ரிலீஸில் சிக்கல்

ஆனால், நாங்கள் எடுத்த சூலம் படம் சில வெளியீட்டு காரணங்களால் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு தாமதமாக ரிலீஸ் ஆனது. அதற்குள் பாரதிராஜாவின் நிழல்கள் படமும் ஒரு மாதத்திற்கு முன்னரே ரிலீஸ் ஆனது.

அப்போது பாரதிராஜா பீக்கில் இருந்தார். அத்துடன் நிழல்கள் படத்தின் பாடல்களும் ஹிட் அடித்ததால், வைரமுத்துவை பலரும் பாராட்டினர். யார் இந்த புதுமுகம் என அனைவரும் தேட ஆரம்பித்தவுடன் வைரமுத்து தனக்கு புகழ் கிடைத்ததால் இதுதான் என்னுடைய முதல் படம் எனக் கூறிவிட்டார்.

அமைதிப்படை சத்யராஜ் போல மாறிவிட்டார்

அமைதிப்படை சத்யராஜ் போல வைரமுத்து அவருக்கு புகழ் வர வர சூலம் தான் அவர் கை நீட்டி சம்பளம் வாங்கிய முதல் படம் என சொல்வதற்கு தயங்கினார். வெற்றியையும் பெயரையும் கொடுத்த நிழல்களை படத்தை தனக்கான அடையாளமாக மாற்றிக் கொண்டார்.

நான் சொல்வது அத்தனையும் உண்மை. இது இளையராஜா சாருக்கும் தெரியும். நான் சொல்வதில் ஏதாவது பொய் இருந்தால் வைரமுத்துவை மறுக்கச் சொல்லுங்கள்" எனக் கூறி சவாலும் விடுத்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.