Snehan: ‘நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது இன்னொரு உயிர்தானடி..’ ஆனந்த கண்ணீரில் சினேகன் - கன்னிகா
Snehan: பாடலாசிரியர் சினேகனின் மனைவி கன்னிகா தான் கர்ப்பமாக இருப்பதாக ஆனந்த கண்ணீரோடு தெரிவித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய எத்தனையோ முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை எழுதி கொடுத்து இருக்கிறார் சினேகன். புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். அன்று தொடங்கி இவரது பயணம்.
பாடலாசியராக இருந்த சினேகனை குறிப்பிட்ட சிலர் மட்டுமே தெரிந்து வைத்து இருந்த நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின், அனைவராலும் அறியப்பட்ட பிரபலமானார். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல், குடும்பத்தாருடன் உறவு இல்லாமல் தனிமையில் வசித்து வந்த சினேகனுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்புமுனைகளை தந்தது.
குறிப்பாக, அவரது குடும்பத்தாருடன் இணைந்தார், நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்த அவருக்கு வெளியே வந்ததும் திருமணம் நடந்தது. உண்மையில் பிக்பாஸ் சென்று வாழ்க்கை மாறிய ஒரே போட்டியாளர், சினேகன் என்று கூட சொல்லலாம்.