வைரமுத்துவை காப்பாற்றிய லத்தியடி பதிவு.. 7 மணிக்கு மேல அவ இன்ப லட்சுமியா? பாட்ஷாவால் வந்த பிரச்சனை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வைரமுத்துவை காப்பாற்றிய லத்தியடி பதிவு.. 7 மணிக்கு மேல அவ இன்ப லட்சுமியா? பாட்ஷாவால் வந்த பிரச்சனை

வைரமுத்துவை காப்பாற்றிய லத்தியடி பதிவு.. 7 மணிக்கு மேல அவ இன்ப லட்சுமியா? பாட்ஷாவால் வந்த பிரச்சனை

Malavica Natarajan HT Tamil
Jan 04, 2025 09:45 AM IST

பாட்ஷா படத்தில் ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் வெளிவந்த சமயத்தில் தன்னை பலரும் கிண்டல் செய்தனர். அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றியது ஒரு போலீஸ்காரர் என வைரமுத்து கூறியுள்ளார்.

வைரமுத்துவை காப்பாற்றிய லத்தியடி பதிவு.. 7 மணிக்கு மேல அவ இன்ப லட்சுமியா? பாட்ஷாவால் வந்த பிரச்சனை
வைரமுத்துவை காப்பாற்றிய லத்தியடி பதிவு.. 7 மணிக்கு மேல அவ இன்ப லட்சுமியா? பாட்ஷாவால் வந்த பிரச்சனை

ஸ்டைலு ஸ்டைலு தான் பாட்டை கிண்டல் செய்தனர்

இந்தப் பாடலின் வரிகளும், இசையும் இன்றும் மக்களை ஈர்த்து தான் வருகிறது. அப்படிப்பட்ட பாடல் வரிகளை எழுதியவர் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இவர் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கழித்து ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் வெளியான போது சந்தித்த சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்து அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிண்டலுக்கு உள்ளான வரிகள்

அந்தப் பதிவில், பாட்ஷா படத்தில் ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் வெளியான பிறகு பலரும் அந்தப் பாட்டை கொண்டாடினர். ஆனால், என்னைப் பிடிக்காத சிலரோ பாடலில் உள்ள ஒருவரியை மட்டும் வைத்துக் கொண்டு என்னை விமர்சித்தனர் என்று கூறுகிறார்.

அப்படி விமர்சிக்கப்பட்ட பாடல் வரிகள் 7 மணிக்கு மேல நீயும் இன்ப லட்சுமி. இந்த வரியில் பெண் 7 மணிக்கு மேலே இன்ப லட்சுமி என்றால் அதற்கு முன் துன்ப லட்சுமியா என அனைவரும் என்னை கிண்டல் செய்தனர். ஆனால், நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் அந்த விஷயத்தை அமைதியாக கடந்தேன்.

புத்தி வர உதவிய காவல்துறை

அந்த சமயத்தில் தான் என் நண்பரான ஐபிஎஸ் ரவி ஆறுமுகம் என்னை கிண்டல் செய்த அனைவருக்கும் விளக்கம் அளித்தார், அந்தப் பெண் 7 மணிக்கு முன்னதாக வெறும் லட்சுமியாக இருப்பாள். 7 மணிக்கு மேல் தான் இன்ப லட்சுமியாக மாறுவார் என்று எனக் கூறினார்.

அவர் பேசியதற்கு பின் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை, பலருக்கும் காவல்துறையின் விளக்கத்தை கேட்ட பின் தான் புத்தி வந்தது எனவும் கூறினார்.

பாட்ஷா படம்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த், நக்மா, ரகுவரன் நடிப்பில் வெளியான திரைப்படம் பாட்ஷா. மும்பையை சேர்ந்த ரவுடி குடும்பத்தின் நலனுக்காக தமிழ்நாட்டிற்கு வந்து ஆட்டோ ஓட்டுநராக மாறி இருக்கும் கதை பற்றி பேசுகிறது இந்தப் படம்.

நடிகர் ரஜினி காந்த்தின் நடிப்பில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றான இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இன்றும் ரஜினியின் இந்தப் படம் பலரது ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இது ரஜினிக்கான பாட்டே இல்லையா?

ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது நம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த பாட்டை இசையமைப்பாளர் தேவா ரஜினிக்காக இசையமைக்கவில்லையாம். இந்தப் பாடல் நடிகர் அஜித்திற்காக உருவாக்கப்பட்டதாம்.

இதுகுறித்த தகவலை கூறியிருக்கிறார் மறைந்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து. ஆசை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் இந்த பாடலுக்கான இசை பற்றி பேட்டி ஒன்றில் கூறினார். ஆசை படத்தில் அஜித்துக்காக இசையமைக்கப்பட்ட பாடல் தான் ஸ்டைலு ஸ்டைலு தான். இந்தப் பாடல் மிகவும் பெப்பியாக இருக்கிறது. எங்களுக்கு மிகவும் மெலடி பாடல் வேண்டும் எனக் கேட்டதால் தான் தேவா மீனம்மா பாடலை இசையமைத்து கொடுத்தார் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.