‘மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை..’ சினிமா கலைஞர்களின் நாகரிகத்தை கேள்வி எழுப்பும் வைரமுத்து!
தனது பாடல்களின் வரிகளை திரைப்பட பெயர்களாக வைக்கும் முன் தன்னிடம் மரியாதைக்காகவாவது ஒருமுறை கேட்டிருக்கலாம் என பாடலாசிரியர் வைரமுத்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

‘மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை..’ சினிமா கலைஞர்களின் நாகரிகத்தை கேள்வி எழுப்பும் வைரமுத்து!
சமீப காலமாக வெளியாகும் படங்களில் பழைய சினிமா பாடல்களை பயன்படுத்துவது வாடிக்கையாக மாறிவிட்டது. இந்த பாடல்களுக்கு எல்லாம் இசையமைத்தவரிடமோ, படத்தின் இயக்குநரிடமோ அனுமதி வாங்காமல், பாடல்களின் உரிமங்கள் உள்ள நிறுவனத்திடம் மட்டும் அனுமதி வாங்கிவிட்டு பயன்படுத்தி வருவதாகவும் சில குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகிறது.
பாடல்களின் காப்புரிமை பிரச்சனை
இது குறித்து பேசுகையில், நடிகர் தியாகராஜன், இசையமைப்பாளர் தேவா போன்றோர் தங்களது பாட்டு மீண்டும் ஹிட் ஆனால் மகிழ்ச்சியே என கூறி வந்தாலும், இளையராஜா, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா போன்றோர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தப் பிரச்சனையே இன்னும் முடியாமல் இருக்க தற்போது புது பிரச்சனையை எடுத்து வந்துள்ளார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து.