“உன் மீசையைப் போலவே நிமிர்ந்து வணங்குகிறேன்”- மகாகவிக்கு பிறந்தநாளுக்கு வைரமுத்துவின் வாழ்த்து
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களால் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை தன் புரட்சிகர பாடல் வரிகளால் புத்துயிர் பெற்று எழுந்து போராட வைத்த அமரன் மகாகவி பாரதியார். இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டுமல்ல, சாதி, மத, பேதங்களுக்கு எதிராகவும் குரல்கொடுத்து ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்க இறுதி மூச்சுவரை போராடினார்.
பாரதியார் பிறந்தநாள்
பல மொழிகளின் திணிப்புகள் தமிழ்நாட்டில் தொடரும் நிலையில், தமிழ் மொழியையும் அதன் படைப்புகளையும் எளிமையாக்கி பாமர மக்களின் பாட்டாளரான பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இப்படி மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் புத்துணர்வு அளித்த பாரதியாருக்கு கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து அவரது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரதிக்கு பெருமை செய்த வைரமுத்து
அந்தப் பதிவில், "எல்லாக் கவிஞனும்
நிலைப்பதில்லை;
நீ நிலைக்கிறாய்
காரணம்
நீ
முக்காலத்தின் குரல்
உன் சொற்கள்
நிகழ்காலத்திலும் ஏன்
நீள்கின்றன?
அவை
நித்தியத்தின் சத்தியங்கள்
அமரன் படத்தில்
துப்பாக்கிச் சத்தத்தின்
தப்பாத தாளத்தில்
வீரர்கள் பாடும்
அச்சமில்லை அச்சமில்லை
காலம் கடக்கும்
உன் தமிழென்று
கட்டியம் கூறும்
எட்டயபுரத்தில் மட்டும்
எப்படி ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த
கருப்பை?
இந்த வரிகள் சொல்லும்
உன் இருப்பை
உன்
மீசையைப் போலவே
நிமிர்ந்து வணங்குகிறேன்
உன்னை" எனக் கூறியுள்ளார்.
முண்டாசுக் கவிஞருக்கு பாராட்டு
அனைத்து காலத்திற்கும் ஏற்ற கருத்துகளை தன் எளிய கவிதை வரிகள் மூலம் கடத்திய முண்டாசுக் கவிஞரை பாராட்டி உள்ளார் வைரமுத்து. பாரதியாரை பெற்றெடுத்த அவரது அன்னையையும் இந்த கவிதை வரிகள் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காலம் கடந்த அமரன்
70 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே எனும் பாரதியாரின் வரிகள், 21ம் நூற்றாண்டில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த அமரனில் வீரமாக ஒலிப்பதையும் அவர் இங்கு பெருமைபட குறிப்பிட்டுள்ளார்.
இவரது அச்சமில்லை அச்சமில்லை எனும் பாடல் தமிழ் மொழியில் மட்டுமல்ல, இந்தியாவில் வெளியான அனைத்து மொழி படங்களிலும் ஒலித்தது அவர் காலம் கடந்தவர் என்பதை உணர்த்துவதாக உள்ளது என்றும் பெருமைபட பேசியுள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்து
இப்படிப்பட்ட மகானை அவரது பிறந்தநாளன்று, உன் மீசையைப் போலவே நிமிர்ந்து வணங்குகிறேன் என்று பாரதியாரைப் பெருமை படுத்தியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்