Tamil News  /  Entertainment  /  Lyricist Thamarai Opens About Mallipoo Song
தாமரை
தாமரை

Mallipoo Song: பாடல் எழுத சுதந்திரம் கொடுத்தார்கள் - ஹிட் பாடல் குறித்து தாமரை

22 September 2022, 20:55 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 20:55 IST

பாடலாசிரியை தாமரை மல்லீப்பூ பாடல் உருவான விதம் குறித்து பதிவு வெளியிட்டுள்ளார். 

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்றுள்ள மல்லீப்பூ பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. எங்கு பார்த்தாலும் இந்த பாடல் ஒலித்து கொண்டே இருக்கிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

இப்பாடல் எழுதிய தாமரை தனது ட்விட்டர் பக்கத்தில்,"வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெறும் 'மல்லீப்பூ வெச்சு வெச்சு வாடுதே' பாடல் பெரும்பாலானோரைக் கவர்ந்திருக்கிறது என அறிகிறேன். மகிழ்ச்சி . இந்தப் படத்திற்காக நான் எழுதிய முதல் பாடல் இது. 

போன ஆண்டே எழுதிப் பதிவு செய்து படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சென்ற மாதம்தான் பாடகி மதுஸ்ரீயின் குரல் பதிவு நடந்தது. இந்தப் பாடலைப் படமாக்கும் போதே படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள் எல்லோருக்கும் பாடல் பிடித்திருக்கிறது, ஆட்டத்துக்கான பாடல் என்று !

பாடல் துள்ளிசையாக இருந்தாலும், வேலைக்காக வீட்டை/நாட்டை/உறவுகளை விட்டு வெகுதூரம் செல்லும் மனிதர்களின் பிரிவாற்றாமையே கரு ! -. கணவன்-மனைவி பாடலாக இருந்தாலும், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியாகவே அமைத்துக் கொண்டேன். அதே சமயம், ஆழமான வரிகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணரலாம். அந்த வகையில் கௌதம், ஏ.ஆர்.ரஹ்மான் எனக்குக் கொடுத்த சுதந்திரம் பெரிது.

படக் காட்சிக்காக மட்டுமல்லாமல், தொலைதூர உறவுகளின் உணர்வாக அமைத்துக் கொண்டதால் பலருக்கும் இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. என்ன இருந்தாலும் 'பிரிவு' ஒரு வலுவான உணர்வல்லவா ? இந்த வகை பாடல் இதற்கு முன் அவ்வளவாக வந்ததில்லை என்பதும் காரணம்.

முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல். விரைவாக எழுதி விட்டேன். நாட்டுப்புறப் பாடல்கள் நான் எழுத மாட்டேன் எனப் பலரும் நினைத்திருப்பதால், பாடல் பதிவின் போது புன்னகைத்துக் கொண்டேன்" என்றார். 

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்