Lyricist Pa. Vijay: 'இப்போ எல்லாரும் பாட்டு எழுத வர்றாங்க.. அவங்களை எல்லாம்.. என் ஆசை இதுதான்'- பா.விஜய் ஓபன்அப்
Lyricist Pa. Vijay: தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டு கடந்து இன்று மாபெரும் ஜாம்பவானாக உள்ள பா.விஜய் தன் சினிமா அனுபவங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Lyricist Pa. Vijay: தமிழ் சினிமாவில் பாடாலாசிரயராக நுழைந்த பா. விஜய் இன்று கவிஞராக, நடிகராக, இயக்குநராக பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவர் சினிமாத் துறைக்குள் வந்து 25 வருடங்கள் கடந்த நிலையில், தன் அனுபவங்களையும் எண்ணங்களையும் எஸ்எஸ் மியூசிக் பாட்காஸ்ட்டில் பகிர்ந்துள்ளார்.
எல்லாரும் பாட்டு எழுதுறாங்கே
அதில், "இப்போ சினிமாவுல நிறைய பேர் பாட்டு எழுதுறாங்க. நடிகர்கள் பாட்டு எழுதுறாங்க. இயக்குநர்கள் பாட்டு எழுதுறாங்க. எல்லாருக்கும் எழுத வரும். ஆனா, எல்லாராலையும் எல்லா பாட்டும் எழுதிட முடியாது. மொழி அறிவும் இசை அறிவும் இருந்து, இசைக்கு ஏத்த மாதிரி வார்த்தைய எப்படி பொருத்தனும்ன்னு தெரிஞ்சாலே நம்மால எழுத முடியும்.
பேசுனால எதிர்வினை வருது
ஒரு சிற்பி தான் சிலைய செதுக்க முடியும். நாம எதையாவது வரைஞ்சா அது சிலை ஆகாது. இன்னைக்கு இருக்க உலகம் ஃபேன்பேஸ்டு உலகமா மாறிடுச்சு. இப்போ நான் யாரப்பத்தியாவது ஒரு கருத்த முன்வச்சா, அவங்களோட ரசிகர்கள் தரப்புல இருந்து எதிர்வினை வர ஆரம்பிச்சிடுது. ஒரு கருத்துக்காக லட்சக்கணக்கான பேருக்கு எதிரானவனா நான் மாறிடுவேன். அதுனால இதபத்தி எல்லாம் பேச விரும்பல.
