Vidaamuyarchi: சவதீகா பாட்டை இப்படி கேட்டிருக்கீங்களா? வீடியோ வெளியிட்டு வைப் ஆக்கிய லைகா! குஷி மோடில் ஃபேன்ஸ்..
Vidaamuyarchi: விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடலின் புது வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ்.

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் குமார்- திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில், ஏற்கனே படத்தில் இருந்து 2 சிங்கிள்களை படக்குழு வெளியிட்டு, வைப் ஆக்கியது.
விடாமுயற்சி நியூ வெர்ஷன்
இந்நிலையில், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடலான சவதீகாவின் புது வெர்ஷனை வெளியிட்டுள்ளது படக்குழு. அனிருத் இசையில், அந்தோணிதாசன் பாடிய சவதீகா பாடல் புதுப்புது வார்த்தைகளாலும் துள்ளலான இசையாலும் பேசப்பட்டது.
இந்த வைப்பை குறையாமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு சவதீகா பாடலின் அனிரூத் வெர்ஷன் தற்போது வெளியாகியுள்ளது. சவதீகா பாடலை அனிரூத் குரலில் கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், இந்தப் பாடல் அனிX ஆண்டோ வெர்ஷன் என அறிவித்த படக்குழு, இதனை ப்யூர் வைப் மெட்டீரியல் என்றும் கூறியுள்ளது.
சவதீகா பாடல்
இந்த பாடலில் மிகவும் பேசப்பட்டது அஜித் குமாரின் நடனம் தான். கோட் சூட் உடையில், மிகவும் ஸ்டைலாகவும் கிளாசியாகவும் தன் நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார் அஜித். சவதீகா என்றால் வாங்க என பொருள் என முன்னதாக பாடகர் ஆந்தோணி தாசன் கூறி இருப்பார். நிகழ்ச்சி ஒன்றிற்கு வருவோரை வரவேற்கும் விதமாக இந்தப் பாடல் துள்ளலாக அமைந்திருக்கும் எனவும் அவர் கூறியிருப்பார். அத்துடன் சவதீகா பாடலின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திற்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்ததாகவும், தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் மாத்திரைகள் எடுத்துக் கொண்டு நடனமாடினார் என்றும் நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் கூறி இருந்தார்.
விடாமுயற்சி ரிலீஸ்
முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு டிரைலர் ரிலீஸில் அறிவித்துள்ளது. இதையடுத்து, பல திரைப்படங்கள் அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து வருகின்றன. மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குஷியில் ரசிகர்கள்
அஜித் குமாரின் விடாமுயற்சி படம் படப்பிடிப்பின் போதே பல்வேறு காரணங்களால் தள்ளித் தள்ளி போனது. இதன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதற்கு பல்வேறு கராணங்களும் கூறப்பட்டு வந்தது. இவற்றிற்கு எல்லாம் படக்குழுவிடமிருந்து எந்த விளக்கமும் இல்லாத நிலையில், 2025 பொங்கல் ரேலீஸ் களமிறங்கியது விடாமுயற்சி. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.
ஆனால், அதை குழைக்கும் வகையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புத்தாண்டு வாழ்த்து சொல்லி தெரிவித்தது. இதனால் மூட் அவுட்டில் இருந்த ரசிகர்கள் விடாமுயற்சி ரிலீஸிற்கு காத்திருந்த நிலையில், டிரெயிலர் வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்தது படக்குழு.
தேதி குறிச்ச படக்குழு
இதையடுத்து, விடாமுயற்சி படத்தின் ரிலீஸில் தீவிரம் காட்டி வந்த படக்குழு வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி படத்தை உலகம் முழவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறி அதற்கான வேலையில் தீவிரம் காட்டி வருகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்