Tamil News  /  Entertainment  /  Lyca Case Against Vishal: Mhc Refuses To Accept Lyca Production Plea Agaisnt Vishal
விஷாலுக்கு எதிரான வழக்கில் லைகா நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு
விஷாலுக்கு எதிரான வழக்கில் லைகா நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு

Lyca case against vishal: லைகா கோரிக்கை ஏற்க மறுப்பு! விசாரணை ஒத்திவைப்பு

23 September 2022, 18:49 ISTMuthu Vinayagam Kosalairaman
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 18:49 IST

விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விஷால் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற லைகா நிறுவனத்தின் கோரிக்கை ஏற்க மறுத்துள்ளது.

விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் பட வெளியீட்டுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சொத்து விவரங்கள் அடங்கிய பிராமண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில், விஷால் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு, "தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளதால் இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என கோரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு, "தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பின்னர் இந்த மனுவை விசாரிப்பதாக கூறி, விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்