Lucky Man Trailer: யோகி பாபுவின் லக்கிமேன் டிரைலரை வெளியிட்ட நடிகர்கள் விஜய் சேதுபதி, சித்தார்த்
ஆர்ஜேவாக இருந்து நடிகரான பாலாஜி வேணுகோபால் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள லக்கி மேன் திரைப்படத்தின் டிரைலர் இன்று யூ-டியூப் தளத்தில் வெளியானது.
இந்தப் படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி, சித்தார்த் ஆகியோர் ரிலீஸ் செய்தனர்.
"இந்த உலகம் அழகானவர்களை ரசிக்கும், அறிவாளிகளை மதிக்கும், பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்படும், அதிகாரம் உள்ளவர்களைக் கண்டு பயப்படும்" என்று ஒரு வாய்ஸ்ஓவருடன் டீஸர் தொடங்குகிறது. ஆனால் எந்த நாளும் உழைப்பவர்கள் மீது மட்டுமே உலகம் நம்பிக்கை வைத்திருக்கும். அப்போது கார் ஷோரூமில் வேலை பார்க்கும் சாமானியராக நடிக்கும் யோகி பாபு அறிமுகமாகிறார்.
ராஜரத்தினம் புகழ் வீரா, கடைசி விவசாயி புகழ் ரேச்சல் ரெபேக்கா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
குட் நைட் படத்தில் கலக்கிய சான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். லக்கி மேன் என்ற பெயரில் கார்த்திக், கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில் 1995ம் ஆண்டு தமிழ் படம் ஒன்று ரிலீஸ் ஆகி பட்டையைக் கிளப்பியது நினைவுகூரத்தக்கது. அந்தப் படத்தை நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார்.
தற்போது அதே பெயரில் காமெடியில் கலக்கி வரும் யோகி பாபு நடிப்பில் இந்தப் படம் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மதன். இந்த படத்தின் தியேட்டருக்கு பிந்தைய டிஜிட்டல் உரிமையை பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
யோகி பாபு தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ஆவார். ஆண்டவன் கட்டளை (2016), கோலமாவு கோகிலா (2018), பரியேறும் பெருமாள் (2018) ஆகிய படங்களில் முத்திரை பதித்தார். ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்தார். அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்