'மக்கள் அந்த அளவுக்கு மோசமில்ல.. அவங்க நம்பிக்கைய சாகடிக்க விரும்பல..' -லக்கி பாஸ்கர் டைரக்டர் வெங்கி அட்லூரி
மக்கள் ஒரு நம்பிக்கையோட என் படத்தை பார்க்க வரும்போது, அதை சாகடிக்க தான் விரும்பவில்லை என லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி கூறியுள்ளார்.

பாக்ஸ ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் ஹிட் அடித்ததுடன் லக்கி பாஸ்கர் படத்தில் மக்கள் இந்த இடத்தில் இந்த சீன் தான் வரும் என யூகித்து யூகித்து வைத்த அத்தனை பழைய சினிமாவின் தாக்கத்தையும் ஒரே அடியாக அடித்து துவைத்திருப்பார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இதுகுறித்து அவர் கோபிநாத்துடன் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் தன் கருத்துகளை தெரிவித்துள்ளார். அப்போது, மக்கள் தன் படத்தை பார்க்க வரும்போது உள்ள நம்பிக்கையை சாகடிக்க விரும்பவில்லை என பேசியுள்ளார்.
மக்கள் அந்த அளவுக்கு மோசமில்லை
அதுபற்றி பேசிய வெங்கி அட்லூரி, "சினிமாவில் உள்ள வழக்கமான கதைகளையும் நம்பிக்கைகளையும் உடைக்க நான் ஆசைப்பட்டேன். ஹீரோவோட நல்ல நண்பரா இருக்கவங்க கண்டிப்பா அவர ஏமாத்திட்டு தான் போவாரு அப்படிங்குறத காலம் காலமா சினிமாவுல காட்டிட்டு வர்றோம். நான் அதை உடைக்கணும்ன்னு நினைச்சு தான் ராம்கி கேரக்டர லக்கி பாஸ்கர் படத்துல வச்சேன். மக்கள் எல்லாம் நாம நினைக்குற அளவுக்கு மோசமாக இல்லை என்பது தான் என் கருத்து.
