Lucky Bhaskar: இது வரைக்கும் வேற எந்த படமும் இல்ல.. நான் தான் ஃபர்ஸ்ட்.. சொல்லி அடித்த லக்கி பாஸ்கர்..
Lucky Bhaskar: நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில், துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புதிய சாதனையை சீதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

Lucky Bhaskar: துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமல்லாமல், நெட்ஃபிக்ஸிலும் அதிரடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று தீபாவளி பண்டிகையின் போது வெளியான இந்தப் படம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதன்பின்னர் ஓடிடியிலும் சாதனை படைத்து, தொடர்ச்சியாக 13 வாரங்களாக டிரெண்டிங்கில் இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படமாக இருக்கிறது.
லக்கி பாஸ்கர் சாதனை
துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகி, நவம்பர் 28 ஆம் தேதி முதல் நெட்ஃபிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஓடிடியில் இந்தப் படத்தின் வெற்றி தொடர்கிறது.
ஒரு நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவர்கள் குடும்பத்திற்காக ரிஸ்க் எடுத்தால் என்ன ஆகும் என்பதை பல த்ரில்லிங்கான காட்சிகளுடனும் வசனத்துடனும் வெளிப்படுத்தியதால் இந்தப் படம் வெளியாகி இத்தனை நாள் ஆகியும் அதன் மவுசு குறையாமல் இருக்கிறது.
உத்வேகம் அளிக்கும் வசனங்கள்
குறிப்பாக இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான வசனங்கள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், எதார்த்தத்தை முகத்தில் அரைந்தார் போலவும் வெளிப்படுத்துவதால் இணையத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் லக்கி பாஸ்கர் படத்தின் டயலாக்குகள் நம்மை சுற்றி சுற்றி வருகின்றன.
முதல் தென்னிந்திய படம்
முதல் வாரத்திலிருந்தே நெட்ஃபிக்ஸ் டாப் 10 டிரெண்டிங் படங்களில் இடம் பெற்ற இந்தப் படம், தொடர்ச்சியாக 13 வாரங்களாக டாப் 10 இல் இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படமாக லக்கி பாஸ்கர் இருப்பதாக சீதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் புதன்கிழமை (பிப்ரவரி 26) தனது எக்ஸ் அக்கவுண்ட் மூலம் அறிவித்தது.
அந்தப் பதிவில்“டிஜிட்டல் உலகிலும் லக்கி பாஸ்கர் தனது வெற்றியைத் தொடர்கிறது. நெட்ஃபிக்ஸில் தொடர்ச்சியாக 13 வாரங்கள் டிரெண்டிங்கில் இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம் இது. பார்வையாளர்களின் அன்பிற்கு இதுவே சான்று. பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற லக்கி பாஸ்கர் திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது” என்று சீதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் ட்வீட் செய்துள்ளது.
பல மொழிகளில் துல்கர்
மலையாள நடிகரான துல்கர் சல்மான் தெலுங்கு மற்றும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு திறமையால் அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் குவிந்து வருகிறது. துல்கர் சல்மானின் எதார்த்தமான நடிப்பு இயல்பான பேச்சு தொனி மற்றும் சிறந்த கதை தேர்வு என அனைத்து விதங்களிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும் படிக்க: ஹாட்ரிக் வெற்றி கொடுத்து வசூல் சாதனை படைத்த துல்கர்..
லக்கி பாஸ்கர் படம் பற்றி
லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சௌத்ரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு சாதாரண வங்கி ஊழியர் எப்படி அநியாயத்திற்கு ஆளாகி, பின்னர் அதே வங்கியைப் பயன்படுத்தி கோடிகளை சம்பாதிக்கிறார் என்பதை இந்தப் படம் காட்டுகிறது. 1990களின் பின்னணியில் இந்தக் கதை நடைபெறுகிறது.
இந்தப் படம் துல்கருக்கு தெலுங்கில் தொடர்ச்சியான நான்காவது வெற்றியை அளித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் உடனே நெட்ஃபிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

டாபிக்ஸ்